Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிரம்ப் சீனா உதவியுடன் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார் - ஜோ பிடன்

டிரம்ப் சீனா உதவியுடன் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார் - ஜோ பிடன்

By: Karunakaran Fri, 23 Oct 2020 3:32:50 PM

டிரம்ப் சீனா உதவியுடன் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார் - ஜோ பிடன்

அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 3-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டெனால்டு டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். அமெரிக்க தேர்தலை பொறுத்தவரை அதிபர் வேட்பாளர்கள் நேருக்கு நேர் சந்தித்து நேரடி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்பது மிகவும் பிரபலமான தேர்தல் பிரசார நடைமுறை ஆகும்.

அதிபர் வேட்பாளர்களான டொனால்டு டிரம்ப், ஜோ பிடனுக்கு இடையே கடந்த மாதம் 29-ம் தேதி ஓஹியோ மாகாணத்தில் முதல் நேரடி விவாதம் நடந்தது. அதிபர் வேட்பாளர்களின் 2-வது நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சி கடந்த 15-ம் தேதி புளோரிடா மாகாணத்தில் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையிலான இறுதிக்கட்ட விவாதம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

trump,china,joe biden,us election ,டிரம்ப், சீனா, ஜோ பிடன், அமெரிக்க தேர்தல்

டொனால்டு டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையில் நடைபெற்ற இறுதிக்கட்ட விவாதத்தில் ஜோ பிடன் பேசுகையில், அமெரிக்க அதிபர் தன்னுடைய வரியையே கட்டவில்லை. தவறான வழிகளில் டிரம்ப் குடும்பம் சம்பாதித்துள்ளது. டிரம்ப் சீனா உதவியுடன் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார். சீனாவில் டிரம்புக்கு ரகசிய வங்கி கணக்குகள் உள்ளன. வடகொரியா அதிபர் கிம் நல்ல மனிதர் என டிரம்ப் கூறுகிறார். அதிபர் டிரம்பால் அமெரிக்காவில் ஒரு கோடி பேர் காப்பீட்டை இழந்துவிட்டனர். கொரோனாவால் மக்கள் மடிந்து கொண்டிருக்கின்றனர் என்று கூறினார்.

டொனால்டு டிரம்ப் பேசுகையில், அதிபராகும் முன்பே என்னுடைய சீன வங்கிக்கணக்கை மூடிவிட்டேன். கோடிக்கணக்கில் முன்கூட்டியே வரி செலுத்தி விட்டேன். அமெரிக்காவில் கொரோனாவால் இறப்போர் விகிதம் குறைந்துள்ளது. கொரோனாவில் இருந்து 99% இளைஞர்கள் குணமடைந்துள்ளனர். இந்தாண்டு இறுதிக்குள் கொரோனாவுக்கு தடுப்பூசி வந்துவிடும். அமெரிக்காவில் கொரோனா பரவ நான் காரணமில்லை. தவறு செய்தது சீனாதான். சீனா, ரஷியா, உக்ரைனிடம் இருந்து பணம் எதுவும் பெறவில்லை என ஜோ பிடன் குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளித்தார்.

Tags :
|
|