Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜார்ஜியா மாகாணத்தில் தேர்தல் முடிவுகளை மாற்ற ஆளுநருக்கு டிரம்ப் அழுத்தம் கொடுத்ததாக தகவல்

ஜார்ஜியா மாகாணத்தில் தேர்தல் முடிவுகளை மாற்ற ஆளுநருக்கு டிரம்ப் அழுத்தம் கொடுத்ததாக தகவல்

By: Karunakaran Mon, 07 Dec 2020 09:59:39 AM

ஜார்ஜியா மாகாணத்தில் தேர்தல் முடிவுகளை மாற்ற ஆளுநருக்கு டிரம்ப் அழுத்தம் கொடுத்ததாக தகவல்

அமெரிக்காவில் கடந்த மாதம் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் நீண்ட இழுபறிக்கு பின், ஜனாதிபதி டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இவர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ந் தேதி அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். அதேசமயம் தேர்தல் நடந்து முடிந்து ஒரு மாதமான பிறகும் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் தொடர்ந்து பிடிவாதமாக உள்ளார்.

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டும் டிரம்ப், ஜோ பைடன் வெற்றியை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார். இதனால் இது மிகவும் கசப்பான தேர்தலாக மாறியுள்ளது. இருப்பினும், தேர்தல் முடிவுகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் டிரம்ப் தரப்பு தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்நிலையில் வருகிற ஜனவரி மாதம் 5-ந் தேதி ஜார்ஜியா மாகாணத்தில் இருந்து 2 செனட்சபை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடக்கிறது.

trump,governor,election results,georgia ,டிரம்ப், கவர்னர், தேர்தல் முடிவுகள், ஜார்ஜியா

ஜார்ஜியா மாகாணத்தில் குடியரசு கட்சியின் சார்பில் தற்போதைய செனட் சபை உறுப்பினர்களான டேவிட் பெர்ட்யூ, கெல்லி லோப்லர் ஆகிய இருவரும் மீண்டும் போட்டியிடுகின்றனர். செனட் சபை தேர்தலில் வெற்றி பெற குடியரசு கட்சி தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக ஜனாதிபதி டிரம்ப் ஜார்ஜியா மாகாணத்தில் நேற்றுமுன்தினம் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, ஜோ பைடன் மோசடி செய்து தன்னிடம் இருந்து வெற்றியை பறித்து விட்டதாக குற்றம் சாட்டினார்.

அதற்கு முன்னதாக இந்த பிரசாரத்தில் கலந்து கொள்வதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு டிரம்ப், ஜார்ஜியா மாகாண ஆளுநரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்த மாகாணத்தில் தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க கூறி அவருக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|