Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவின் டிக் டாக் நிறுவனத்துக்கு எதிராக புதிய உத்தரவை பிறப்பித்த டிரம்ப்

சீனாவின் டிக் டாக் நிறுவனத்துக்கு எதிராக புதிய உத்தரவை பிறப்பித்த டிரம்ப்

By: Karunakaran Sun, 16 Aug 2020 1:16:16 PM

சீனாவின் டிக் டாக் நிறுவனத்துக்கு எதிராக புதிய உத்தரவை பிறப்பித்த டிரம்ப்

லடாக் மோதலுக்கு பின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி இந்தியா 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது. இதில் சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான டிக் டாக் செயலியும் அடங்கும். அதனை தொடர்ந்து, டிக் டாக் செயலி அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை மற்றும் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க டிரம்ப் முடிவு செய்து தொடர்ந்து டிக் டாக் நிறுவனத்துக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த வாரம் அமெரிக்காவில் டிக் டாக் செயலியின் பரிவர்த்தனைக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.

trump,china,tik tok,new order ,டிரம்ப், சீனா, டிக் டோக், புதிய உத்தரவு

தற்போது அதிபர் டிரம்ப் டிக்-டாக் நிறுவனத்துக்கு எதிராக புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அதிபர் டிரம்ப் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி, சீன பங்குதாரர்கள் அமெரிக்காவில் செய்துள்ள முதலீடுகளை 90 நாட்களுக்குள் விலக்கிக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் வெளிநாட்டு முதலீட்டுக்கான குழுவின் நிபந்தனைகளின் பேரில் பைட்டான்ஸ், அதன் துணை நிறுவனங்கள் மற்றும் சீன பங்குதாரர்கள் அமெரிக்காவில் செய்துள்ள முதலீடுகள் உள்ளிட்ட அசையா சொத்துகள் மற்றும் அனைத்து வகையான அசையும் சொத்துகள் என எல்லாவற்றையும் 90 நாட்களுக்குள் விலக்கிக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|