Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

By: Karunakaran Tue, 25 Aug 2020 08:43:37 AM

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்சியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால், அமெரிக்காவில் அதிபர் மற்றும் துணை அதிபருக்கான தேர்தல் வரும் நவம்பர் 3 ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபராக இருந்த ஜோ பைடன் அதிபர் வேட்பாளராகவும், தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றனர்.

தற்போது ஜனநாயக கட்சியின் அதிபர் மற்றும் துணை அதிபர் வேட்பாளர்களான ஜோ பைடன், கமலா ஹாரிஸ் தங்கள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். குடியரசுக்கட்சியின் சார்பில் அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவராமல் இருந்த நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

trump,republican presidential candidate,america,presidential election ,டிரம்ப், குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர், அமெரிக்கா, ஜனாதிபதித் தேர்தல்

குடியரசுக்கட்சியின் சார்பில் அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்தலில், தற்போது அதிபராக உள்ள டொனால்டு டிரம்ப் மற்றும் துணை அதிபராக உள்ள மைக் பென்சி மீண்டும் போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடைபெற உள்ள தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட டொனால்டு டிரம்ப் மற்றும் மைக் பென்சி அதிபர் மற்றும் துணை அதிபர் வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என குடியரசுக்கட்சியின் தேசிய குழு அறிவித்துள்ளது.

அமெரிக்க தேர்தலில் ஜோ பைடனுக்கு போட்டியாக டிரம்பும், கமலா ஹாரிசுக்கு போட்டியாக மைக் பென்சியும் அதிகாரப்பூர்வமாக களமிறங்கியுள்ளனர். அதிபர் டிரம்ப்புக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருவதால், இந்த தேர்தலில் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|