Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராணுவ ஆஸ்பத்திரியில் இருந்து விரைவில் திரும்ப வருவேன் என கூறி வீடியோ வெளியிட்ட டிரம்ப்

ராணுவ ஆஸ்பத்திரியில் இருந்து விரைவில் திரும்ப வருவேன் என கூறி வீடியோ வெளியிட்ட டிரம்ப்

By: Karunakaran Mon, 05 Oct 2020 09:23:07 AM

ராணுவ ஆஸ்பத்திரியில் இருந்து விரைவில் திரும்ப வருவேன் என கூறி வீடியோ வெளியிட்ட டிரம்ப்

அமெரிக்க வல்லரசின் ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு, கடந்த 1-ந் தேதி உறுதியானது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 3-ந் தேதி நடக்க உள்ள நிலையில், கொரோனா தாக்குதல் டிரம்பை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அதிபர் டிரம்ப், 2-ந் தேதி பெதஸ்தாவில் உள்ள வால்டர் ரீட் ராணுவ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லப்பட்டு அங்கு சேர்க்கப்பட்டார்.

நேற்று முன்தினம் அவர் 4 நிமிடம் ஓடக் கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உடல்நிலை நன்றாக இல்லாத நிலையில், நான் இங்கு வந்தேன். இப்போது நான் நன்றாக இருப்பதாக உணர்கிறேன். நான் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதற்காக கடுமையாக உழைக்கிறோம். நான் விரைவில் திரும்ப வருவேன். தேர்தல் பிரசாரத்தை முடிக்க நான் ஆவலோடு காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

trump,video,military hospital,corona virus ,டிரம்ப், வீடியோ, ராணுவ மருத்துவமனை, கொரோனா வைரஸ்

மேலும் அவர், நான் எல்லா அமெரிக்கர்களுக்காகவும்தான் இங்கே போராடிக்கொண்டிருக்கிறேன். அடுத்த சில நாட்களில், ஒரு உண்மையான பரிசோதனை இருப்பதாக நான் யூகிக்கிறேன். எனவே அடுத்து வரும் நாட்களில் என்ன நடக்கப்போகிறது என்று பார்ப்போம். என் மனைவி மெலனியா இளமையாக இருப்பதால் நன்றாக இருப்பதாக உணர்கிறார். இளம்வயதினரைப் பொறுத்தமட்டில் கொரோனாவின் லேசான அறிகுறிகளைத்தான் அனுபவிக்கிறார்கள். அமெரிக்காவிலும், உலகமெங்கும் உள்ள மக்களுக்கும், அவர்களது ஆதரவு வார்த்தைகளுக்காகவும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

இந்த வீடியோ காட்சியில் டிரம்ப் வழக்கம் போல ‘கோட்-சூட்’ அணிந்திருந்தாலும், ‘டை’ அணியாமல், அமெரிக்க தேசிய கொடி பறக்க விடப்பட்ட சூழலில், மேஜையின் முன் நாற்காலியில் அமர்ந்து காணப்பட்டார். இதுகுறித்து வெள்ளை மாளிகை மருத்துவ நிபுணர் டாக்டர் சீன் கான்லி கூறுகையில், ஜனாதிபதி மிகச்சிறப்பாக செயல்படுவதாகவும், சிகிச்சைக்கு சாதகமாக பதில் அளிப்பதாகவும் தெரிவித்தார். மெலனியா டிரம்ப், தொடர்ந்து வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

Tags :
|
|