Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடைசி கட்ட பிரசாரத்தில் நடனமாடும் வீடியோவை வெளியிட்ட டிரம்ப்

கடைசி கட்ட பிரசாரத்தில் நடனமாடும் வீடியோவை வெளியிட்ட டிரம்ப்

By: Nagaraj Tue, 03 Nov 2020 7:11:42 PM

கடைசி கட்ட பிரசாரத்தில் நடனமாடும் வீடியோவை வெளியிட்ட டிரம்ப்

நடனமாடும் வீடியோ... அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும், டிரம்ப் தனது கடைசி கட்ட பிரசாரத்தில் நடனமாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவின் அடுத்த அதிபர் குறித்து உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ள எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், அதிபர் தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று (நவ.,3)ல் துவங்கி நடந்து வருகிறது.

இதனையடுத்து, குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் தற்போதைய அதிபர் டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பிடனும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். இறுதிகட்ட பிரசாரத்தின் போது, ஓய்எம்சிஏ என்ற பாடலுக்கு அதிபர் டிரம்ப் நடனமாடினார்.

trump,dancing video,twitter page,usa ,டிரம்ப், நடனமாடும் வீடியோ, டுவிட்டர் பக்கம், அமெரிக்கா

இந்த பாடலமானது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் விளையாட்டு நிகழ்ச்சிகளின் போது அதிகளவில் ஒலிபரப்பப்படும். இந்த பாடலுக்கு நடனமாடியதை, டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் '' வோட்! வோட் !வோட்!'' என தலைப்பு போட்டு வெளியிட்டுள்ளார்.

அவரது பிரசார குழுவினரும் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags :
|