Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிரம்ப் அதிபர் மாளிகையில் இருந்து கவுரவமாக வெளியேற வேண்டும் - மருமகன் அறிவுரை

டிரம்ப் அதிபர் மாளிகையில் இருந்து கவுரவமாக வெளியேற வேண்டும் - மருமகன் அறிவுரை

By: Karunakaran Mon, 09 Nov 2020 3:26:11 PM

டிரம்ப் அதிபர் மாளிகையில் இருந்து கவுரவமாக வெளியேற வேண்டும் - மருமகன் அறிவுரை

அமெரிக்காவில் கடந்த 3-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில், அதிபர் டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் பெரும்பான்மையான வாக்குகளுடன் வெற்றி பெற்றார். ஆனால் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்திருப்பதாக தொடர்ந்து அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். மேலும் இதுதொடர்பாக வழக்கு தொடரப்போவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க தேர்தல் முடிவை ஏற்க மறுத்து டிரம்ப் பிடிவாதம் காட்டுவது அந்த நாட்டில் கொந்தளிப்பான நிலையை உருவாக்கியுள்ளது. உலக நாட்டு தலைவர்கள் அனைவருமே ஜோபைடன் வெற்றியை ஏற்றுக் கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டனர். ஆனாலும் கூட டிரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுக்கிறார். அவர் அவ்வாறு நடந்து கொள்வது அமெரிக்க மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

trump,president house,nephew,defeat ,டிரம்ப், ஜனாதிபதி மாளிகை, மருமகன், தோல்வி

இதற்கு முன்பு தேர்தல்களில் பல பிரச்சினைனகள் வந்துள்ளன. ஆனால் எந்த அதிபரும் பிடிவாதம் காட்டியதில்லை. அமெரிக்காவில் பிரபலமான பலரும், சமூக அமைப்பினரும், டிரம்ப் முரண்டு பிடிக்காமல் தோல்வியை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர் அமைதியான முறையில் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறி வருகின்றனர.

தற்போது, டிரம்ப்பின் பிடிவாதத்திற்கு அவரது சொந்த குடும்பத்தில் இருந்தும் கூட எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக அவரது மருமகன் ஹெராடு குல்ஷனர் கூறுகையில், டிரம்ப்பின் பிடிவாதத்தை அமெரிக்க மக்கள் ஏற்க வில்லை. அவர் தனது தோல்வியை ஏற்றுக் கொண்டு அதிபர் மாளிகையில் இருந்து கவுரவமாக வெளியேற வேண்டும் என்று கூறியுள்ளார்.

Tags :
|
|