Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஹாங்காங் மக்களுக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு சீனாவை பொறுப்பேற்க கையெழுத்திட்ட டிரம்ப்

ஹாங்காங் மக்களுக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு சீனாவை பொறுப்பேற்க கையெழுத்திட்ட டிரம்ப்

By: Karunakaran Thu, 16 July 2020 3:53:28 PM

ஹாங்காங் மக்களுக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு சீனாவை பொறுப்பேற்க கையெழுத்திட்ட டிரம்ப்

சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் ஹாங்காங் உள்ளது. அண்மையில் சீனாவுக்கு எதிரான போராட்டங்கள் ஹாங்காங்கில் வலுப்பெற்று வந்ததால் அவற்றை ஒடுக்க சீனா புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த புதிய சட்டம் ஹாங்காங்கின் சுதந்திரத்தையும் சுயாட்சியும் பறிக்கும் செயல் என அமெரிக்கா உள்பட பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்கா இந்த விவகாரத்தில் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, ஹாங்காங்கின் சுயாட்சியை உறுதி செய்யும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஹாங்காங் சுயாட்சி சட்ட மசோதா கொண்டுவரப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

hong kong,china,trump,against the people ,ஹாங்காங், சீனா, டிரம்ப், அடக்குமுறை

தற்போது இந்த சட்ட மசோதாவில் ஜனாதிபதி டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார். மேலும், ஹாங்காங்குக்கு அமெரிக்கா வழங்கும் சிறப்பு முன்னுரிமைகளை ரத்து செய்யும் நிர்வாக உத்தரவிலும் அவர் கையெழுத்திட்டார்.

இதுகுறித்து அதிபர் டிரம்ப் கூறுகையில், ஹாங்காங் மக்களுக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு சீனாவை பொறுப்பேற்க வைக்கும் சட்டம் மற்றும் நிர்வாக உத்தரவில் நான் இன்று கையெழுத்திட்டேன். இந்த புதிய சட்டம் ஹாங்காங்கின் சுதந்திரத்தை அணைக்க முயற்சிக்கும் நபர்களை பொறுப்பேற்க வைப்பதற்கு எனது நிர்வாகத்துக்கு அதிகாரத்தை வழங்கும் என்று கூறினார்.

Tags :
|
|