Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மருந்து பொருட்களின் விலையைக் கணிசமாக குறைக்க 4 நிர்வாக உத்தரவுகளில் டிரம்ப் கையெழுத்து

மருந்து பொருட்களின் விலையைக் கணிசமாக குறைக்க 4 நிர்வாக உத்தரவுகளில் டிரம்ப் கையெழுத்து

By: Karunakaran Sun, 26 July 2020 8:07:31 PM

மருந்து பொருட்களின் விலையைக் கணிசமாக குறைக்க 4 நிர்வாக உத்தரவுகளில் டிரம்ப் கையெழுத்து

அமெரிக்காவில் டாக்டர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்து பொருட்களின் விலையைக் கணிசமாக குறைக்க 4 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிபர் டிரம்ப் கூறுகையில், மக்களின் மருந்து செலவுகளை பெருவாரியாக குறைக்க வழி வகுக்கும் 4 நிர்வாக உத்தரவுகளில் நான் கையெழுத்திட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

முதல் நிர்வாக உத்தரவின்படி சமூக சுகாதார மையங்கள் இன்சுலின் போன்ற அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு பெரும் தள்ளுபடியை நோயாளிகளுக்கு நேரடியாக அனுப்ப வேண்டும். இந்த உத்தரவின் கீழ் நோயாளிகளுக்கு இன்சுலின் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

trump,drug prices,4 executive order,signs ,டிரம்ப், மருந்து விலை, 4 நிர்வாக உத்தரவு, கையெழுத்து

2-வது நிர்வாக உத்தரவானது ஒரே மாதிரியான மருந்துகளின் விலைகள் குறைவாக இருக்கும் கனடா மற்றும் பிற நாடுகளிலிருந்து சட்டபூர்வமாக மருந்துகளை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் எனவும், 3-வது நிர்வாக உத்தரவின் கீழ் மருந்து தயாரிப்பாளர்கள் இடைத்தரகர்கள் மற்றும் மருந்தக மேலாளர்களுக்கு வழங்கும் தள்ளுபடிகள் நேரடியாக நோயாளிகளுக்கு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4-வது நிர்வாக உத்தரவு மத்திய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியாக முன்னேறிய பிறநாடுகளில் இருந்து மிகக் குறைந்த விலையில் மருந்துகளை வாங்க வழிசெய்யும் வகையில் கையெழுத்திட்டதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Tags :
|