Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க கைதியை ஈரான் விடுதலை செய்ததற்காக ஈரானுக்கு டிரம்ப் நன்றி

அமெரிக்க கைதியை ஈரான் விடுதலை செய்ததற்காக ஈரானுக்கு டிரம்ப் நன்றி

By: Karunakaran Sat, 06 June 2020 12:29:13 PM

அமெரிக்க கைதியை ஈரான் விடுதலை செய்ததற்காக ஈரானுக்கு டிரம்ப் நன்றி

அமெரிக்க நாட்டை சேர்ந்த மைக்கேல் ஒயிட் என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு ஈரான் நாட்டில் உள்ள தனது காதலியை சந்திக்க சென்றார். அப்போது ஈரான் நாட்டு போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டு, குறிப்பிடப்படாத குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்க பல்கலைக்கழகத்தின் ரகசியங்களை வியாபாரம் செய்ய முயற்சித்ததாக தண்டிக்கப்பட்டிருந்த ஈரான் நாட்டின் விஞ்ஞானி சிரஸ் அஸ்காரி என்பவரை அமெரிக்கா விடுதலை செய்தது. இந்த நேரத்தில், அமெரிக்க கைதி மைக்கேல் ஒயிட்டை ஈரான் விடுதலை செய்துள்ளது.

michael white,iran,trump,us president , மைக்கேல் ஒயிட்,ஈரான்,டிரம்ப்,அமெரிக்க ஜனாதிபதி,

கடந்த மார்ச் மாதம் மருத்துவ காரணங்களையொட்டி தற்காலிகமாக விடுவிக்கப்பட்டு, டெக்ரானில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் இருந்த ஒயிட், விடுதலை செய்யப்பட்டதை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறுகையில், ஒயிட் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சுவிஸ் விமானத்தில் அவர் ஈரானில் இருந்து புறப்பட்டு விட்டார். வெளிநாடுகளில் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ள அனைத்து அமெரிக்கர்களையும் விடுவிப்பதற்கான பணியை நான் ஒருபோதும் நிறுத்த மாட்டேன் என்று கூறினார்.

மேலும் மைக்கேல் ஒயிட்டை விடுதலை செய்ததற்கு அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், நன்றி ஈரான். இது ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு உண்டு என்பதை காட்டுவதாக அமைந்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

Tags :
|
|