Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிரம்பால் பிறருக்கு கொரோனா பரவும் அபாயம் இல்லை - வெள்ளை மாளிகை தகவல்

டிரம்பால் பிறருக்கு கொரோனா பரவும் அபாயம் இல்லை - வெள்ளை மாளிகை தகவல்

By: Karunakaran Mon, 12 Oct 2020 2:42:23 PM

டிரம்பால் பிறருக்கு கொரோனா பரவும் அபாயம் இல்லை - வெள்ளை மாளிகை தகவல்

அமெரிக்காவில் கொரோனா பரவலுக்கு மத்தியில் அடுத்த மாதம் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் 2-வது முறையாக போட்டியிட அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் களம் இறக்கப்பட்டுள்ளார். தேர்தலுக்காக கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் சூறாவளி பிரசாரம் செய்து வந்த டிரம்ப், கடந்த 1-ந்தேதி கொரோனா தொற்றுக்கு ஆளானார்.

அதன்பின் அவர் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டே அலுவலக பணிகளை கவனித்து வந்த டிரம்ப், 4 நாட்களுக்கு பிறகு கடந்த 5-ந் தேதி வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டாலும் டிரம்ப் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்டுவிட்டாரா என்பதை அவரது மருத்துவர்கள் தெளிவுபடுத்தாமல் இருந்து வந்தனர்.

trump,threatens,corona,white house ,டிரம்ப், அபாயம், கொரோனா, வெள்ளை மாளிகை

இந்நிலையில், டிரம்புக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை முடிவடைந்ததாகவும் சனிக்கிழமை முதல் அவர் தனது அரசு பணிகளை மீண்டும் தொடங்குவார் என்றும் வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவர் சீன் கான்லி கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இருப்பினும், டிரம்புக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு அதில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதா என்பதை மருத்துவர் சீன் கான்லி தெளிவுபடுத்தவில்லை.

இந்தநிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 10 நாட்களுக்கு பிறகு ஜனாதிபதி டிரம்ப் முதல் முறையாக, நேற்றுமுன்தினம் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இதுகுறித்து, ஜனநாயக கட்சியின் மூத்த எம்.பி. ஆடம் ஷிப், “வெள்ளை மாளிகையில் நேற்று நடந்தது சாதாரண நிகழ்ச்சி அல்ல, கொரோனா வைரசை பரப்புவதற்கான மாபெரும் பேரணி” என சாடினார். இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவர் சீன் கான்லி, அதிபர் டிரம்புக்கு நடத்தப்பட்ட தொடர்ச்சியான சோதனைகள் வைரஸ் சுமைகள் குறைந்ததை நிரூபித்துள்ளன. டிரம்பிடம் இருந்து மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இல்லை என்று தெரிவித்தார்.

Tags :
|
|