Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிபர் வேட்பாளராக டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்

அதிபர் வேட்பாளராக டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்

By: Nagaraj Tue, 25 Aug 2020 10:35:11 AM

அதிபர் வேட்பாளராக டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்

அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு... அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் இப்போதுதான் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஜோ பிடன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் துணை அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்த போது துணை அதிபராக ஜோபிடின் இருந்தார். அப்போதே ஜோபிடன் எதிர்கால அதிபராக வருவார் என்று கணிக்கப்பட்டது. ஆனால் இடையில் ஹிலாரி கிளிண்டன் தேர்தலில் நின்றதால், இந்த முறை தேர்தலில் நிற்கிறார் ஜோபிடன்.

அதிலும் ஜோபிடன் தனது துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸை தேர்வு செய்துள்ளார். இப்போதே அவருக்கு ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை வந்த கருத்து கணிப்பில் ஜோபிடன்தான் முன்னிலையில் இருக்கிறார்.

official,announcement,candidate,trump,campaign ,அதிகாரப்பூர்வம், அறிவிப்பு, வேட்பாளர், டிரம்ப், பிரச்சாரம்

இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக அதிபர் டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளார். டிரம்ப் அதிபர் வேட்பாளராக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு விட்டார். ஆனாலும் இப்போதுதான் அதிகாரபூர்வமாக அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். துணை அதிபர் வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

அதிபர் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக நடந்த உட்கட்சி தேர்தலிலேயே டிரம்ப் மிகுந்த வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார். குடியரசு கட்சியின் பிரைமரி தேர்தலில் டிரம்பிற்கு குடியரசு கட்சி உறுப்பினர்களின் ஆதரவே அதிகம் இருந்தது. டிரம்பிற்கு 93.95% குடியரசு கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர். தற்போது இதனால் அதிகாரபூர்வமாக டிரம்ப் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதை கொண்டாடும் வகையில் நாளையில் இருந்து நான்கு நாட்கள் டிரம்ப் குடும்பத்தினர் மக்கள் முன்னிலையில் பிரச்சாரம் செய்ய உள்ளனர். இவாங்கா டிரம்ப், லாரா டிரம்ப் எல்லோரும் வரிசையாக டிரம்பிற்காக பிரச்சாரம் செய்ய உள்ளனர். அதன்பின் வியாழக்கிழமை டிரம்ப் நார்த் கரோலினாவில் மக்கள் முன்னிலையில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

Tags :
|