Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வாஷிங்டன் நீதிமன்றத்தில் இணை நீதிபதியாக விஜய் சங்கர் என்பவரை நியமிக்க டிரம்ப் விருப்பம்

வாஷிங்டன் நீதிமன்றத்தில் இணை நீதிபதியாக விஜய் சங்கர் என்பவரை நியமிக்க டிரம்ப் விருப்பம்

By: Karunakaran Sat, 27 June 2020 1:32:23 PM

வாஷிங்டன் நீதிமன்றத்தில் இணை நீதிபதியாக விஜய் சங்கர் என்பவரை நியமிக்க டிரம்ப் விருப்பம்

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றம், வாஷிங்டனில் உள்ள மிக உயர்ந்த நீதிமன்றம் ஆகும். தற்போது இந்த கோர்ட்டின் இணை நீதிபதி பதவிக்கு பலரது பெயர் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.

பலரது பெயர் பரிந்துரைக்கப்பட்டு வந்தாலும், அமெரிக்க செனட் ஒப்புதல் அடிப்படையிலே இணை நீதிபதி தேர்ந்தெடுக்கப்படுவார். இந்நிலையில் அந்த கோர்ட்டின் இணை நீதிபதியாக அமெரிக்கவாழ் இந்தியர் விஜய் சங்கர் என்பவரை நியமிக்க ஜனாதிபதி டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.

vijay shankar,washington court,trump,associate justice ,விஜய் சங்கர், வாஷிங்டன் நீதிமன்றம், டிரம்ப், இணை நீதிபதி

அதன்படி, அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்தால், விஜய் சங்கர் இணை நீதிபதியாக அப்பணியில் நியமிக்கப்படுவார். விஜய் சங்கர் தற்போது நீதித்துறையில் மனுக்கள் பிரிவு மூத்த வக்கீலாக பணியாற்றி வருகிறார். இதற்கு முன் வாஷிங்டனில் தனியாக வக்கீல் தொழில் செய்து வந்துள்ளார்.

மேலும் ஒரு நீதிபதியிடம் சட்ட குமாஸ்தாவாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags :
|