Advertisement

டிரம்பின் பிரசார இணையதளத்தை ஹேக்கர்கள் முடக்கினர்

By: Karunakaran Thu, 29 Oct 2020 12:16:26 PM

டிரம்பின் பிரசார இணையதளத்தை ஹேக்கர்கள் முடக்கினர்

அமெரிக்காவில் வருகிற 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிட அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் களமிறக்கப்பட்டு உள்ளார். தேர்தலை முன்னிட்டு அங்கு தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

இருப்பினும் தேர்தலுக்கு முன்பாகவே அங்கு 6 கோடி பேர் வாக்களித்து விட்டனர். தேர்தலுக்கு இன்னமும் சில நாட்களே இருக்கும் நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் இருவரும் ஒவ்வொரு மாகாணமாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர டிரம்பின் பிராசார குழு தனி இணையதளம் வாயிலாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது.

trump,campaign website,hackers,america ,டிரம்ப், பிரச்சார வலைத்தளம், ஹேக்கர்கள், அமெரிக்கா

டிரம்பின் பிரசார இணையதளத்தை ஹேக்கர்கள் முடக்கினர். சுமார் 30 நிமிடத்துக்கும் மேலாக அந்த இணையதளத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஹேக்கர்கள் அதில் டிரம்புக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டனர். இது அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் விவகாரம், வேலையின்மை, இனவெறிக்கு எதிரான போராட்டம் போன்றவை இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும். தேர்தலுக்கு முந்தைய கணிப்பில் ஜோ பைடன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

Tags :
|