Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 34 ஆயிரத்தை தாண்டிய துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்க உயிரிழப்பு

34 ஆயிரத்தை தாண்டிய துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்க உயிரிழப்பு

By: vaithegi Mon, 13 Feb 2023 11:26:54 AM

34 ஆயிரத்தை தாண்டிய துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்க  உயிரிழப்பு

துருக்கி : நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியது .... துருக்கி மற்றும் சிரியாவை நிலைகுலைய செய்த அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இன்றுடன் மட்டும் 1 வாரம் ஆகிறது.

ஆனால் அந்த 2 நாடுகளிலும் அழு குரலும், மரண ஓலமும் இன்னும் ஓய்ந்த பாடில்லை. கான்கிரீட் குவியல்களுக்குள் இருந்து அள்ள அள்ள பிணங்கள் கிடைப்பதால் பலி எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து கொண்டே வருகிறது.

earthquake,turkey,syria ,நிலநடுக்கம் ,துருக்கி ,சிரியா

அந்த வகையில் 2 நாடுகளிலும் நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்து விட்டது. 92 ஆயிரத்துக்கு அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். பலியானவர்களில் துருக்கியில் மட்டுமே 29 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்கள் பறிபோனதாக தகவல்கள் பல தெரிவிக்கின்றன.

இதையடுத்து அதே சமயம் சிரியாவில் வெள்ளிக்கிழமைக்கு பிறகு பலி எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. அங்கு கடைசியாக வெளியான தகவலின் படி நிலநடுக்கத்துக்கு சுமார் 4 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக தெரிகிறது.

Tags :
|