Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காங்கோவில் மது போதையில் ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு

காங்கோவில் மது போதையில் ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு

By: Karunakaran Sat, 01 Aug 2020 11:52:08 AM

காங்கோவில் மது போதையில் ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இதனால் கிளர்ச்சியாளர்கள் குழுக்களை ஒடுக்கவும், பாதுகாப்புக்காகவும் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராணுவம் பணியமர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, அந்நாட்டின் கிவு மாகாணம் சங் நகரில் ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்பட்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று மது போதையில் வந்த ஒரு ராணுவ வீரர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நின்று கொண்டிருந்த பொதுமக்களை குறிவைத்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதனை எதிர்பாராத பொதுமக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள சிதறி ஓடினர்.

congo,twelve dead,drunk,soldier ,காங்கோ, பன்னிரண்டு பேர் உயிரிழப்பு , குடிபோதை, ராணுவ வீரர்

ராணுவ வீரர் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். இந்த பயங்கர தாக்குதலில் பொதுமக்களில் 12 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர். பின்னர் இதுகுறித்து பாதுகாப்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

பின்னர் அங்கு வந்த பாதுகாப்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின், தப்பிச்சென்ற ராணுவ வீரரை தீவிரமாக தேடிவருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து சங் நகர மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags :
|
|