Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ட்விட்டர் ஊழியர்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரமும் வாரத்தின் 7 நாட்களும் பணிபுரிய வேண்டும் .. மீறினால் வேலை ..

ட்விட்டர் ஊழியர்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரமும் வாரத்தின் 7 நாட்களும் பணிபுரிய வேண்டும் .. மீறினால் வேலை ..

By: vaithegi Wed, 02 Nov 2022 7:03:45 PM

ட்விட்டர் ஊழியர்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரமும் வாரத்தின் 7 நாட்களும் பணிபுரிய வேண்டும்   ..   மீறினால் வேலை   ..

சென்னை: 12 மணிநேரமும் வாரத்தின் 7 நாட்களும் பணிபுரிய வேண்டும் .... உலகின் மிகவும் பிரபல நிறுவனமான ட்விட்டரை எலான் மஸ்க் அவர்கள் வாங்கியுள்ளார். இவர் பொறுப்பேற்று அலுவலகத்திற்கு வந்தது முதல் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு வருகிறது.அதில் முதல் கட்டமாக இவர் ட்விட்டரின் முக்கிய அதிகாரிகளை பணி நீக்கம் செய்தார்.

குறிப்பாக அந்த நிறுவன CEO பராக் அகர்வால் வெளியேறினார். இந்த நடவடிக்கை ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மேலும் தற்போது பணியில் உள்ள ஊழியர்கள் 75% பேர் பணி நீக்கம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

twitter,work ,ட்விட்டர் ,வேலை

இதனை அடுத்தாக வளர்ச்சியை நோக்கிய செயல்பாட்டில் முதல் கட்டமாக விரைவில் தளத்தின் Verification முறையை மாற்றவும் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இனி ட்விட்டர் ஊழியர்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரமும் வாரத்தின் 7 நாட்களும் பணிபுரிய வேண்டும் என முக்கிய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனை மீறினால் வேலை இழக்க நேரிடும் என கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து தற்போது ட்விட்டரின் புதிய அம்சமாக அனைவரும் டிவிட்டுக்களை திருத்தும் வசதி கொண்டு வரப்படவுள்ளதாக தகவல் வந்துள்ளது. ஏற்கனவே இந்த அம்சம் உள்ளது. ஆனால் அது ப்ளு டிக் பயனர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்தது. இனி அனைவருக்கும் கிடைக்கும் படி மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் விரைவில் அனைவருக்கும் இந்த எடிட்டிங் ஆப்ஷன் கிடைக்கும் என தகவல் வந்துள்ளது.

Tags :