Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசியல்வாதிகள், பிரபலங்களின் ப்ளூ டிக்கை நீக்கிய ட்விட்டர் நிறுவனம்

அரசியல்வாதிகள், பிரபலங்களின் ப்ளூ டிக்கை நீக்கிய ட்விட்டர் நிறுவனம்

By: Nagaraj Fri, 21 Apr 2023 11:05:39 AM

அரசியல்வாதிகள், பிரபலங்களின் ப்ளூ டிக்கை நீக்கிய ட்விட்டர் நிறுவனம்

நியூயார்க்: ப்ளூ டிக் நீக்கம்... தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், உத்தரப்பிரேதச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜரிவால், நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகளுக்கான ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.

ப்ளூ கணக்கு வாங்காத அனைவரின் ட்விட்டர் கணக்குகளில் இருந்து ப்ளூ டிக்கை டிவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.

பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள் என பல ப்ளூ டிக் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தின் இந்த அதிரடி .நடவடிக்கை பயனர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.மாத சந்தா தொகை செலுத்தி ட்விட்டர் ப்ளூ கணக்கு வாங்காத அனைவரின் ட்விட்டர் கணக்குகளில் கொடுக்கப்பட்டிருந்த அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு என்னும் டிக் மார்க் தற்போது நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

dissatisfaction,businessmen,politicians,blue tick,elimination ,அதிருப்தி, தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், ப்ளூ டிக், நீக்கம்

உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், கடந்த அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினர். இதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தில் ப்ளு டிக், ஆட்குறைப்பு, என்று பல்வேறு அதிரடிகளை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

ட்விட்டர் பயனாளர்களின் வெரிஃபைடு கணக்குகளுக்கு வழங்கப்படும் ப்ளூ டிக்கை தொடர்ந்து பெற இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறியிருந்த எலான் மஸ்க், கட்டணம் செலுத்தாத பயனர்களின் அந்த ப்ளூ டிக் குறியீடு விரைவில் அகற்றப்படும் என்று ஏற்கனவே கூறியிருந்தார்.

அதன் அடிப்படையில் ஏப்ரல் மாதம் முதல் பணம் செலுத்தாத பயனர்களின் ப்ளூ டிக் குறியீடுகள் அகற்றப்படும் என்று ட்விட்டர் நிறுவனம் அறிவித்திருந்தார். ட்விட்டர் நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள் என பல ப்ளூ டிக் பயனர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :