Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நேபாளத்தில் 25 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நேபாளத்தில் 25 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம்

By: Nagaraj Tue, 03 Oct 2023 10:14:41 PM

நேபாளத்தில் 25 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நேபாளம்: நேபாளத்தில் பஜ்ஹாங் மாவட்டத்தில் 25 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் உள்பட மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதனால் பல கட்டடங்கள் சேதமடைந்தன.

ரிக்டர் அளவுகோலில் 5.3, 6.2 மற்றும் 4.1 என்ற அளவில் நிலநடுக்கங்கள் பதிவானதாக தேசிய நிலநடுக்க தகவல் மையம் தெரிவித்துள்ளது.

earthquake,nepal,impact,felt,roads ,நிலநடுக்கம், நேபாளம், பாதிப்பு, உணரப்பட்டது, சாலைகள்

நிலநடுக்கத்தால் 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பல கட்டடங்கள் சேதமடைந்தன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவால் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து தடைபட்டது.

நிலநடுக்கத்தால் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்களின் பாதிப்பு டெல்லியில் உணரப்பட்டது. தலைநகரில் மக்கள் அச்சமடைந்து உயரமான கட்டடங்களில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

உத்தர பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags :
|
|
|