Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • யானைகளின் வாழ்விடங்களில் 3ல் 2 பங்கு அழிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தகவல்

யானைகளின் வாழ்விடங்களில் 3ல் 2 பங்கு அழிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தகவல்

By: Nagaraj Fri, 28 Apr 2023 5:40:36 PM

யானைகளின் வாழ்விடங்களில் 3ல் 2 பங்கு அழிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தகவல்

கலிபோர்னியா: ஆய்வில் தகவல்... ஆசியா முழுவதும் யானைகளின் வாழ்விடங்களில் 3ல் 2 பங்கு அழிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

சான்டியாகோவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், காடழிப்பு, விவசாயம், மரம் வெட்டுதல், சாலைகள் அமைத்தல் போன்ற காரணங்களால் யானைகள் தங்கள் வாழிடங்களை இழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

elephants,land,research information,forests,habitats ,யானைகள், நிலம், ஆய்வில் தகவல்,  காடுகள், வாழிடங்கள்

தற்போது 13 நாடுகளில் வசித்து வரும் ஆசிய யானைகளின் காடுகள் மற்றும் புல்வெளிப் பகுதிகளில் 64 விழுக்காடு அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக யானை, மனித மோதல்கள் அதிகரித்துள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. சீனாவில் 94 விழுக்காடு நிலத்தையும், இந்தியாவில் 86 விழுக்காடு நிலத்தையும் யானைகள் இழந்துள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|