Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை விமான நிலையத்தில் சிக்கிய இருவர்; ரூ.23 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெளிநாட்டு பொருட்கள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் சிக்கிய இருவர்; ரூ.23 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெளிநாட்டு பொருட்கள் பறிமுதல்

By: Monisha Thu, 03 Dec 2020 11:32:26 AM

சென்னை விமான நிலையத்தில் சிக்கிய இருவர்; ரூ.23 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெளிநாட்டு பொருட்கள் பறிமுதல்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது அந்த விமானத்தில் சந்தேகப்படும்படியாக வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த சாதிக் அப்துல் மன்னன்(வயது 46), தமீமுன் அன்சாரி அப்துல் ரசீத்(34) ஆகிய இருவரை சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர். இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.

airport,special plane,iphones,cigarettes,gold ,விமானநிலையம்,சிறப்புவிமானம்,ஐபோன்,சிகரெட்டு,தங்கம்

அதில் ரூ.11 லட்சம் மதிப்புள்ள 11 ஐபோன்கள், 45 பெட்டி வெளிநாட்டு சிகரெட்டுகள், 11 மடிக்கணினிகள் ஆகியவற்றை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். மேலும் 2 பேரையும் தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்ததில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள 240 கிராம் தங்கத்தையும் மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது.

இதையடுத்து இரண்டு பேரிடம் இருந்தும் மொத்தம் ரூ.23 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகள், லேப்டாப்கள், விலை உயர்ந்த செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், பிடிபட்ட இரண்டு பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :