Advertisement

அமீரக வெளியுறவுத்துறை அமைச்சர் இந்திய வருகை

By: Nagaraj Mon, 21 Nov 2022 10:32:46 PM

அமீரக வெளியுறவுத்துறை அமைச்சர் இந்திய வருகை

புதுடில்லி: சந்திக்கிறார்...ஐக்கிய அரபு அமீரக வெளியுறவுத்துறை அமைச்சர் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்த பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷேக் அப்துல்லாவுடன் உயர்மட்ட அதிகாரிகள் குழுவும் சென்றது. இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை ஷேக் அப்துல்லா சந்திக்கிறார்.

abdullah,india,uae , இந்தியா, ஜெய்சங்கர், ஷேக் அப்துல்லா

இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரு நாடுகளுக்கும் இடையே வழக்கமான ஆலோசனையின் ஒரு பகுதியாக இந்த பயணம் அமைந்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையேயான விவகாரம், சர்வதேச விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படும்,” என்றார். பிரதமர் மோடி, ஜூன்28ல், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|