Advertisement

Uber, Ola ஓட்டுனர்கள் 2 நாட்களாக போராட்டம்

By: vaithegi Tue, 17 Oct 2023 2:24:52 PM

Uber, Ola ஓட்டுனர்கள் 2 நாட்களாக போராட்டம்

சென்னை: சென்னையில் ஓலா, ஊபர் வாடகை கார் ஓட்டுநர்கள் கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்தி கொண்டு வருகின்றனர். அதாவது, பண்டிகை தினங்களில் ஓலா, ஊபர் மூலமாக கார் புக் செய்யும் போது பல மடங்கு கட்டணம் வசூல் செய்வதாக பல்வேறு குற்றசாட்டுகள் வந்து உள்ளன.

அதே நேரத்தில், ஊபர், ஓலா ஓட்டுனர்களுக்கு சரியான சம்பளத்தை வழங்காமல் ஓட்டுநர்களிடம் இருந்து கூடுதல் கமிஷனையும் நிறுவனங்கள் பெற்று விடுவதால் ஓட்டுநர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

drivers,struggle,uber,ola ,ஓட்டுநர்கள் ,போராட்டம் ,Uber, Ola

இந்நிலையில், 13 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக ஊபர், ஓலா ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், முன்பதிவு எதுவும் இல்லாமல் பயணிகளும் அதிக அளவில் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதற்கு இடையே, சென்னையில் மட்டுமே ஓட்டுனர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் இன்று கோவை, மதுரை மற்றும் திருச்சியிலும் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும், ஓட்டுனர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் செய்யப்படும் வரைக்கும் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|