Advertisement

UCG – NET தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது

By: vaithegi Fri, 09 Sept 2022 8:00:20 PM

UCG – NET தேர்வுக்கான  கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது

இந்தியா: இந்தியாவில் அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர் பணியிடங்களுக்கு UCG நெட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 2 முறை இத்தேர்வை பல்கலைக்கழக மானிய குழு மற்றும் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றம் இணைந்து நடத்தி வருகிறது.

இதை அடுத்து தற்போது பள்ளி ஆசிரியர்கள் தகுதி தேர்வை போல இந்த NET தேர்விலும் தேர்ச்சி பெறுபவர்களின் சான்றிதழ் ஆயுட்காலம் முழுவதும் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2022ம் ஆண்டுக்கான நெட் தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது.

time table,ucg – net exam ,கால அட்டவணை, UCG – NET தேர்வு


நடப்பு ஆண்டு ஆகஸ்ட் மாதம் UCG தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அதனை தொடர்ந்து செப்டம்பர் மாதம் தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பட்டது. தற்போது தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையங்கள், அனுமதி சீட்டு பற்றி விவரங்கள் https://csirnet.nta.nic.in/, https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றி கூடுதல் விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் 011-40759000, 011-69227700 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் சந்தேகங்களை அனுப்பி தெளிவு காணலாம். மேலும் நாளை (செப்.10) இணையதளத்தில் நெட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாக உள்ளது. இதனை தேர்வர்கள் செப்டம்பர் 13ம் தேதி வரை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தேர்வானது செப்டம்பர் 16ம் தேதி தொடங்கப்பட்டு 18ம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :