Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு பிரமாண்ட சிலை வைக்க வேண்டாம் என உத்தவ் தாக்கரே அறிவுறுத்தல்

விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு பிரமாண்ட சிலை வைக்க வேண்டாம் என உத்தவ் தாக்கரே அறிவுறுத்தல்

By: Karunakaran Mon, 22 June 2020 12:59:47 PM

விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு பிரமாண்ட சிலை வைக்க வேண்டாம் என உத்தவ் தாக்கரே அறிவுறுத்தல்

மும்பையில் ஆண்டுதோறும் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழா 11 நாட்கள் வரை பிரம்மாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ந் தேதி விநாயகர் சதுர்த்தி தொடங்கவுள்ளது. ஆனால் தற்போது கொரோனா பிரச்சினை காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் விமர்சையாக கொண்டாடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை எளிமையாக கொண்டாட சமீபத்தில் மண்டல் நிர்வாகிகளை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கேட்டு கொண்டு கொண்டுள்ளார். இந்நிலையில், மத்தியில் மும்பையில் உள்ள பிரபல கணபதி மண்டல்களை சேர்ந்த பிரநிதிகள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை நேரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு குறித்து முதல்-மந்திரி அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

uddhav thackeray,ganesha chaturthi,huge statue,maharastra ,உத்தவ் தாக்கரே,விநாயகர் சதுர்த்தி,பிரமாண்ட சிலை,வழிபாடு

அதன்படி, முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில், கொரோனா பிரச்சினைக்கு இடையே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் குறித்து கணபதி மண்டல் பிரதிநிதிகள் முதல்-மந்திரியிடம் ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது முதல்-மந்திரி சுத்தம், சுகாதாரம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற மண்டல்களுக்கு உத்தரவிட்டதாகவும், மேலும் வழிபாட்டுக்காக உயரம் குறைந்த பிரமாண்டம் இல்லாத சிலைகளை வைக்கவும், குறைந்த இடத்தில் பந்தல் அமைக்கவும் அறிவுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், இதேபோல மண்டல்களை சேர்ந்தவர்கள் மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தலாம் என முதல்-மந்திரி கூறியதாகவும், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது, அரசின் அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்ற தயாராக இருப்பதாக மண்டல் நிர்வாகிகள் சம்மதித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :