Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் உத்தவ் தாக்கரேக்கு அழைப்பு இல்லை

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் உத்தவ் தாக்கரேக்கு அழைப்பு இல்லை

By: Karunakaran Tue, 28 July 2020 11:20:03 AM

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் உத்தவ் தாக்கரேக்கு அழைப்பு இல்லை

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆண்டுக்கணக்கில் நடந்த சட்ட போராட்டங்கள் கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தன. அங்கு ராமர் கோவில் கட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்ததையடுத்து, அதற்கான பணிகளை விசுவ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் செய்து வருகின்றன.

மேலும் ராமர் கோவில் கட்ட ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டு உள்ளது. ராமர் கோவில் கட்டுமான பணிகளை தொடங்க இந்த அறக்கட்டளை மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் வருகிற 5-ந்தேதி அயோத்தியில் பிரம்மாண்டமாக அமைய உள்ள ராமர் கோவிலுக்கு பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடக்கவுள்ளது.

uddhav thackeray,ayodhya,ram temple,sivasena ,உத்தவ் தாக்கரே, அயோத்தி, ராம் கோயில், சிவசேனா

பிரதமர் மோடி இந்த அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டவுள்ளார். இந்த நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும் பிரதமருடன் பங்கேற்கிறார். பிரதமரும், ஆர்.எஸ்.எஸ். தலைவரும் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். இந்த நிகழ்வில் பங்கேற்க பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக 200 பேரை மட்டுமே அழைக்க முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வலியுறுத்தி உள்ளார். முக்கிய பிரமுகர்கள் என்ற அடிப்படையில் நாட்டின் முக்கிய தொழிலதிபர்களுக்கு அழைப்பு அனுப்பப்படுகிறது. பா.ஜனதா அல்லாத பிற கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு இல்லை என டிரஸ்ட் வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்படி, சிவசேனா தலைவரும், மராட்டிய முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரேக்கு அழைப்பு அனுப்பப்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags :