Advertisement

முதல்வர் கண்டிப்பாக கொள்ள மாட்டார் என உதயநிதி தகவல்

By: Nagaraj Sat, 17 Sept 2022 5:49:19 PM

முதல்வர் கண்டிப்பாக கொள்ள மாட்டார் என உதயநிதி தகவல்

சென்னை : அம்மா உணவகத்தை மாற்ற முதலமைச்சர் ஸ்டாலின் கண்டிப்பாக ஒப்புக்கொள்ளமாட்டார். நாம் பெரியார் உணவகம் என்று ஆரம்பித்து இலவசமாக சாப்பாடு போடலாம் என திமுக இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா உணவகம், திமுக ஆட்சி அமைந்த பிறகும் செயல்பட்டு வருகிறது. அம்மா உணவகங்கள் மூடப்பட இருப்பதாக அவ்வப்போது தகவல்களும் பரவி வருகின்றன. இந்நிலையில், அம்மா உணவகம் என்ற பெயரை பெரியார் உணவகம் என மாற்ற வேண்டும் என்றும் திராவிட இயக்கங்களின் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

அதுகுறித்துப் பேசியுள்ள உதயநிதி ஸ்டாலின், அம்மா உணவகத்தை பெரியார் உணவகமாக மாற்ற முதலமைச்சர் கண்டிப்பாக ஒப்புக் கொள்ள மாட்டார். நாம் தனியாக பெரியார் உணவகம் அமைத்து இலவசமாக சாப்பாடு போடலாம் எனத் தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறு முத்தமிழ்ப் பேரவையில் திராவிடப் பள்ளியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின், கலந்து கொண்டு பேசினார். இந்நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சுப.வீரபாண்டியனின் மிகப்பெரிய ரசிகன் நான். திராவிட மாடல் பயிற்சிப் பாசறைகளை தற்போது வெற்றிகரமாக நடத்தி வருகிறோம்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் திராவிட மாடல் பயிற்சிப் பாசறைகளை நடத்தி முடிப்போம் எனத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், சுப.வீரபாண்டியன், நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளார் என வீட்டிலிருந்து புறப்படும்போது அப்பாவிடம் சொன்னேன். என்னுடைய வாழ்த்துகளை திராவிடப் பள்ளிக்கு சொல்லிவிடு என அவர் கூறினார்.

chief minister,will not agree,amma restaurant,udayanidhi,speech ,முதல்வர், ஒத்துக் கொள்ள மாட்டார், அம்மா உணவகம், உதயநிதி, பேச்சு

நமக்கு இன்னும் பல ஜெயரஞ்சன்கள், சுப.வீரபாண்டியன்கள் வேண்டும். நேரம் கிடைக்கும்போது யுடியூபில் என்னென்னவோ பார்க்கிறோம். சுப.வீரபாண்டியனின் உரையை அனைவரும் பார்க்க வேண்டும் என்றார்.

மேலும் பேசிய உதயநிதி, நானும் திராவிடப்பள்ளியில் படித்து உங்களிடம் சான்றிதழ் பெற வேண்டும் என ஆசையாக உள்ளது. தேர்வெல்லாம் வைக்கிறீர்கள். நான் கண்டிப்பாக பாஸ் ஆகி விடுவேன். நானும் அதற்கான முயற்சியில் இறங்குகிறேன். மாணவனாகவே இங்கு வந்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினர் எழிலரசனும், நானும் சட்டமன்றத்தில் ஒன்றாக தான் அமர்ந்து இருப்போம். அதுவும் பள்ளி மாதிரித்தான் இருக்கும் என்றார்.

பெரியார் உணவகத்தை திறந்து வைக்கும் சுபவீக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அம்மா உணவகத்தை பெரியார் உணவகமாக மாற்ற வேண்டும் என அண்ணன் கூறினார். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் கண்டிப்பாக இதற்கு ஒப்புக்கொள்ளமாட்டார். அது அம்மா உணவகமாகவே இருந்துவிட்டுப் போகட்டும். நாம் தனியாக பெரியார் உணவகம் தொடங்கி இலவசமாகவே சாப்பாடு போடலாம்." எனத் தெரிவித்தார்.

Tags :