Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன் ... உதயநிதி ஸ்டாலின்

பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன் ... உதயநிதி ஸ்டாலின்

By: vaithegi Wed, 14 Dec 2022 10:52:48 AM

பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன்  ...   உதயநிதி ஸ்டாலின்

சென்னை: உதயநிதி ஸ்டாலின் ட்விட் .... திமுக எம்எல்ஏவும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழக அமைச்சராக பதவியேற்றுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் அரசியலில் நுழைந்தார். 2019 ஆம் ஆண்டில் அவருக்கு திமுகவில் இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் மக்களவைத் தேர்தலில் கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். இதன் பின் கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு எம்எல்ஏவானார்.

udayanidhi stalin,twit ,  உதயநிதி ஸ்டாலின்,ட்விட்

இந்த நிலையில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்கு முன் முதல்வரும், தனது தந்தையுமான மு.க. ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.

இதுகுறித்து உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில், எப்போதும் வழிநடத்தும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம், சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தி தமிழர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன். பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன் என அவர் பதிவிட்டுள்ளார்.

Tags :