- வீடு›
- செய்திகள்›
- பொதுத்தேர்வில் தமிழ் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் .. உதயநிதி
பொதுத்தேர்வில் தமிழ் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் .. உதயநிதி
By: vaithegi Tue, 14 Mar 2023 2:22:37 PM
சென்னை: பிளஸ் டூ பொதுத்தேர்வில் தமிழ் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் ...
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2022-23-ம் ஆண்டிற்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த பொதுத்தேர்வு ஏப்ரல் 2-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதனை அடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் என 8 லட்சத்து 51 ஆயிரம் பேரில் முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழித் தேர்வில் 50,674 மாணவ, மாணவிகள் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.
இந்த பொதுத்தேர்வை தமிழகத்தில் 8.36 லட்சம் மாணவர்களும், புதுச்சேரியில் 14,710 மாணவர்கள் எழுத உள்ளதாக கூறப்பட்டது. இதில், பள்ளி தேர்வர்கள் 49,559 பேரும், தனி தேர்வர்கள் 1,115 பேரும் தேர்வு எழுதவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் உதயநிதி, நேற்று பிளஸ் டூ பொதுத்தேர்வில் தமிழ் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது தொடர்பாக கல்வி அமைச்சரிடம் பேசி மீண்டும் தேர்வெழுத வாய்ப்பளிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.