Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழக வளாகங்களில் “கண்காணிப்பு கேமரா” பொருத்தப்பட வேண்டும் .. UGC

அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழக வளாகங்களில் “கண்காணிப்பு கேமரா” பொருத்தப்பட வேண்டும் .. UGC

By: vaithegi Mon, 19 Sept 2022 2:01:14 PM

அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழக வளாகங்களில் “கண்காணிப்பு கேமரா” பொருத்தப்பட வேண்டும்  ..  UGC

சென்னை: இந்தியாவில் நடப்பு கல்வியாண்டில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது, அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

இதை அடுத்து இந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ராகிங்கை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதற்கட்ட நடவடிக்கையாக அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழக வளாகங்களில் “கண்காணிப்பு கேமரா” கட்டாயமான முறையில் பொருத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

surveillance,camera,university campus,college news

மேலும் இது போன்று விடுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். அத்துடன் ராகிங் தடுப்பு குறித்து விழிப்புணர்வு போஸ்டர்களை அனைத்து கல்லூரிகளின் விடுதிகள், உணவகங்கள், கழிவறைகள் உள்ளிட்ட இடங்களில் ஒட்ட வேண்டும்.

இதே போல் முக்கிய இடங்களில் எச்சரிக்கை மணியையும் பொருத்த வேண்டும். இதை தொடர்ந்து ராகிங்கிற்கு எதிரான விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்திட வேண்டும். அத்துடன் கல்லூரிக்கு வருகை புரியும் முதலாம் ஆண்டு மாணவர்களை கல்லூரிகளில் படித்து கொண்டிருக்கும் சீனியர் மாணவர்கள் அவர்களை சகோதர உணர்வுடனும், பரஸ்பரத்துடனும் வரவேற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையானது ராகிங் இல்லாத கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|