Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவில் கட்டாய தொழிலாளர்களாக மாற்றப்பட்ட உய்குர் முஸ்லீம்கள்

சீனாவில் கட்டாய தொழிலாளர்களாக மாற்றப்பட்ட உய்குர் முஸ்லீம்கள்

By: Nagaraj Tue, 15 Dec 2020 10:39:23 PM

சீனாவில் கட்டாய தொழிலாளர்களாக மாற்றப்பட்ட உய்குர் முஸ்லீம்கள்

கட்டாய தொழிலாளர்களாக்கப்பட்ட முஸ்லீம்கள்... கட்டாய உழைப்பு திட்டத்தின் மூலம் பருத்தியை எடுப்பதற்கு உய்குர் சமூகத்தைச் சேர்ந்த ஐந்து லட்சத்திற்கும் அதிகமான முஸ்லீம் சிறுபான்மையினர் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர் என்று ஒரு புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.

வாஷிங்டனை தளமாகக் கொண்ட உலகளாவிய கொள்கைக்கான மையத்தின் அறிக்கையில், ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பிராந்தியத்தைச் சேர்ந்த குறைந்தது 570,000 உள்ளூர்வாசிகள் கட்டாய தொழிலாளர் திட்டத்தின் கீழ் பருத்தி பண்ணைகளில் வேலை வாங்கப்படுகின்றனர் எனத் தெரிவித்துள்ளது.

இந்த மாகாணத்திற்குள் குறைந்தது மூன்று உய்குர் பெரும்பான்மை பிராந்தியங்களில் செயல்படுத்தப்பட்ட திட்டத்தில் ஆன்லைனில் கிடைக்கக்கூடிய உத்தியோகபூர்வ அரசாங்க ஆவணங்களிலிருந்து இந்த மையம் ஆதாரங்களை சேகரித்தது.

uyghur muslims,five lakh people,forced laborers,effort ,
உய்குர் முஸ்லீம்கள், ஐந்து லட்சம் பேர், கட்டாயத் தொழிலாளர்கள், முயற்சி

சீனாவின் பருத்தியில் 80%’க்கும் அதிகமானவை இந்த மாகாணம் உற்பத்தி செய்கிறது. அதே நேரத்தில் உலகின் 20%’க்கும் அதிகமான பணப்பயிர்களை சீனா வழங்குகிறது.

“சீன அரசாங்க ஆவணங்கள் மற்றும் ஊடக அறிக்கைகளின் புதிய சான்றுகள், ஜின்ஜியாங்கில் உள்ள நூறாயிரக்கணக்கான இன சிறுபான்மைத் தொழிலாளர்கள் ஒரு கட்டாய தொழிலாளர் பரிமாற்றம் மற்றும் வறுமை ஒழிப்ப திட்டத்தின் மூலம் கையால் பருத்தியை எடுக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். இது உலகின் மிக மோசமான மனித உரிமை மீறல்.” என அறிக்கை கூறியுள்ளது.

எனினும் சீன வெளியுறவு அமைச்சகம் இந்த அறிக்கையை நிராகரித்தது. இது சீனா மீது அவதூறு பரப்புவதற்கான தொடர்ச்சியான சர்வதேச முயற்சியின் ஒரு பகுதியாகும் என்றும் கூறியது.

Tags :