Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெங்களூர் உணவகத்தில் உணவு சாப்பிடும் இங்கிலாந்து பிரதமர் படம் வைரல்

பெங்களூர் உணவகத்தில் உணவு சாப்பிடும் இங்கிலாந்து பிரதமர் படம் வைரல்

By: Nagaraj Fri, 28 Oct 2022 09:29:01 AM

பெங்களூர் உணவகத்தில் உணவு சாப்பிடும் இங்கிலாந்து பிரதமர் படம் வைரல்

பெங்களூர்: பழைய புகைப்படம் மீண்டும் வைரல்... பெங்களூரில் உள்ள பிரபல உணவகத்தில் பிரிட்டன் பிரதமராக பதவியேற்றுள்ள ரிஷி சுனக் உணவு சாப்பிடும் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

பெங்களூருவில் புகழ்பெற்ற உணவகங்களில் ஒன்று வித்யார்த்தி பவன். மிகவும் புகழ்பெற்ற இந்த உணவகம் கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.

viral,photo,bengaluru,proud miku,son-in-law ,வைரல், புகைப்படம், பெங்களூரு, பெருமை மிகு, மருமகன்

இந்நிலையில், இங்கிலாந்தின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரிஷி சுனக், வித்யார்த்தி பவனில் மசால் தோசை சாப்பிடும் பழைய புகைப்படம் ஒன்று மீண்டும் வைரலாகி வருகிறது.


சில தினங்களுக்கு முன்னர் இந்த புகைப்படத்தை வித்யார்த்தி பவன் உணவகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ரிஷி சுனக்கிற்கு வாழ்த்து தெரிவித்திருந்தது.

இருப்பினும் இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. இந்நிலையில், பெங்களூரு மக்கள் ரிஷி சுனக்கின் Throwback புகைப்படங்களை பகிர்ந்து 'பெங்களூருவின் பெருமைமிகு மருமகன்' என சமுக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Tags :
|
|