ரஷ்ய படைகளிடம் இருந்தும் 4வது ஊர் மீண்டும் கைப்பற்றியதாக உக்ரைன் அறிவிப்பு
By: Nagaraj Tue, 13 June 2023 08:32:57 AM
உக்ரைன்: மீண்டும் கைப்பற்றினோம்... ரஷ்ய படைகளுக்கு எதிரான எதிர்தாக்குதலில், டொனட்ஸ்க் பிராந்தியத்தை சேர்ந்த நான்காவது ஊர் ஒன்றை மீண்டும் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே 3 ஊர்களை விடுவித்திருப்பதாக கூறி இருந்த நிலையில், தற்போது ஸ்டோரோஷீவ் என்ற ஊரையும் மீட்டுள்ளதாக உக்ரைன் படைகள் தெரிவித்துள்ளன.
அந்த பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் இருதரப்புக்கும் இடையே 25 இடங்களில் கடும் சண்டை நடந்ததாகவும் அதில் தங்களுக்கு முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் உக்ரைன் கூறியுள்ளது.
ரஷ்யா தனது கிழக்கு பகுதியில் வான் பாதுகாப்பை அதிநவீனப்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ள உக்ரைன், போரின் போது ரஷ்ய எல்லையில் தாங்கள் ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல் நடத்தி ரஷ்ய படைகளை திணறடித்ததாகவும் கூறியுள்ளது.