பல கிராமங்களை கைப்பற்றியதாக உக்ரைன் அறிவிப்பு
By: Nagaraj Tue, 13 June 2023 11:54:24 PM
உக்ரைன்: பல கிராமங்களை கைப்பற்றி விட்டோம்... உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், பல கிராமங்களை கைப்பற்றிவிட்டதாக உக்ரைனும் ரஷ்யாவும் மாறி மாறி அறிவித்துக் கொண்டிருக்கின்றன.
சபோரிஜியா, டொனெட்ஸ்க் பகுதிகளில் ரஷ்யப் படைகள் வசம் இருந்த 7 கிராமங்களை கைப்பற்றிவிட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஆயுதங்களைக் கொண்டு எதிர்தாக்குதல் நடத்தி 90 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலத்தை கைப்பற்றி, ரஷ்ய படைகளை விரட்டி அடித்ததாகவும் உக்ரைன் கூறியுள்ளது.
ஆனால் உக்ரைன் கைப்பற்றியதாக கூறும் பகுதிகளில், உக்ரைனின் தாக்குதலை முறியடித்துவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :
ukraine |
attack |
rescue |