Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உக்ரைன் விமானம் மனித தவறுகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நம்பவில்லை; கனடா அமைச்சர் தகவல்

உக்ரைன் விமானம் மனித தவறுகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நம்பவில்லை; கனடா அமைச்சர் தகவல்

By: Nagaraj Thu, 17 Dec 2020 09:44:08 AM

உக்ரைன் விமானம் மனித தவறுகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நம்பவில்லை; கனடா அமைச்சர் தகவல்

நான் நம்பவில்லை... உக்ரைன் விமானம் 'மனித தவறுகளின்' காரணமாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளதை, ‘நான் நம்பவில்லை’ என கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2020 ஜனவரி 8 ஆம் தேதி, உக்ரைன் ஏர்லைன்ஸ்-க்கு சொந்தமான போயிங் 737 பயணிகள் விமானம், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட உடனேயே விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த 176 பேரும் பலியாகினர். இறந்த 176 பயணிகள் மற்றும் பணியாளர்களில் ஈரான், கனடா, உக்ரைன், ஆப்கானிஸ்தான், ஜேர்மனி, சுவீடன் மற்றும் பிரித்தானியா குடிமக்கள் அடங்குவர்.

சில நாட்களுக்கு பின்னர், உக்ரைன் பயணிகள் விமானத்தை தாங்கள் தான் 'தவறுதலாக' சுட்டு வீழ்த்திவிட்டதாக ஈரான் ராணுவம் தெரிவித்தது. மேலும், 'மனித தவறுகளின்' காரணமாக அதை சுட்டு வீழ்த்திவிட்டதாக கூறியது. அக்டோபரில், விபத்திற்கான காரணம் குறித்து தங்கள் நாட்டைச் சேர்ந்த தடயவியல் குழு ஆய்வு செய்யும் என கனடா அறிவித்தது.

report,human error,disbelief,ukraine flight ,அறிக்கை, மனித தவறு, நம்பவில்லை, உக்ரைன் விமானம்

இந்நிலையில், உக்ரைன் விமானம் 'மனித தவறுகளின்' காரணமாக சுட்டு வீழ்த்திவிட்டதாக ஈரான் கூறுவதை நான் நம்பவில்லை என கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் ஃபிராங்கோயிஸ்-பிலிப் ஷாம்பெயின் தெரிவித்துள்ளார்.

விமானத்தை குறிவைத்து ஏவுகணைகள் ஏவப்பட்டதை நாங்கள் பார்த்தோம். என்னை பொறுத்தவரை இந்த விஷயம் தான் எல்லா வகையான கேள்விகளையும் சந்தேகத்தையும் எழுப்பியது. உக்ரைன் விமான தாக்குதல் குறித்து கனடா தொடர்ந்து விசாரிக்கும் மற்றும் பொறுப்பானவர்களை அடையாளம் காண இது தொடர்பாக ஈரான் வெளியிட்ட அனைத்து அறிக்கைகளையும் ஆய்வு செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|