Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷ்யா அனுப்பிய ட்ரோன்களை ஒரே இரவில் சுட்டு வீழ்த்திய உக்ரைன்

ரஷ்யா அனுப்பிய ட்ரோன்களை ஒரே இரவில் சுட்டு வீழ்த்திய உக்ரைன்

By: Nagaraj Fri, 26 May 2023 12:25:12 PM

ரஷ்யா அனுப்பிய ட்ரோன்களை ஒரே இரவில் சுட்டு வீழ்த்திய உக்ரைன்

உக்ரைன்: ரஷ்யா அனுப்பிய ஈரானிய தயாரிப்பு ட்ரோன்களை ஒரே நாள் இரவில் சுட்டு வீழ்த்தியுள்ளது உக்ரைன்.

ராணுவ நிலைகள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்யா அனுப்பிய ஈரானிய தயாரிப்பு 36 டிரோன்களை ஒரே நாள் இரவில் சுட்டுவீழ்த்தி விட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

ukraine,attack,overturned,russia,drones ,உக்ரைன், தாக்குதல், முறியடித்துள்ளது, ரஷ்யா, ட்ரோன்கள்

மேலும் தலைநகர் கீவின் வான்பரப்பில் பறந்த டிரோன்கள் தாக்கி அழிக்கப்படும் வீடியோ காட்சிகளையும் உக்ரைன் வெளியிட்டுள்ளது. அக்காட்சியில், டிரோன்கள் தாக்குதலுக்கு ஆளாகி தீப்பிழம்பாய் விழும் காட்சிகள் உள்ளன.

தொடர்ந்து நடந்து வரும் உக்ரைன் மீதான போரில் ரஷ்யா பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ட்ரோன்கள் வாயிலாக தாக்குதல் நடத்த முயற்சித்தது. ஆனால் அதை வானிலேயே உக்ரைன் முறியடித்துள்ளது.

Tags :
|
|