Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்கா வடிவமைத்த புதிய ஆயுதத்தை பயன்படுத்த உக்ரைன் முடிவு

அமெரிக்கா வடிவமைத்த புதிய ஆயுதத்தை பயன்படுத்த உக்ரைன் முடிவு

By: Nagaraj Sun, 05 Feb 2023 1:08:32 PM

அமெரிக்கா வடிவமைத்த புதிய ஆயுதத்தை பயன்படுத்த உக்ரைன் முடிவு

உக்ரைன்: ரஷ்யாவுக்கு உக்ரைன் கொடுக்க உள்ள அதிர்ச்சி... உக்ரைனுக்காக 2 பில்லியன் அமெரிக்க டொலர் இராணுவ உதவியில் போயிங் வடிவமைத்த புதிய ஆயுதமான Ground Launched Small Diameter Bombs முதன்முறையாக பயன்படுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட இந்த ஆயுதத்தை பயன்படுத்தி 150 கி.மீ தொலைவில் உள்ள இலக்குளை தாக்கலாம். இதற்கு முன்னதாக ஏவப்பட்ட ஹிமார்ஸ் வகை ஏவுகணை மூலம் 80 கி.மீ வரை மட்டுமே தாக்க முடியும்.

targets,america,international politics,weapons,arrival ,இலக்குகள், அமெரிக்கா, சர்வதேச அரசியல், ஆயுதங்கள், வருகை

இந்த ஆயுதத்தை பயன்படுத்தும் போது ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட சில பகுதிகளை உக்ரைனால் மீண்டும் மீட்டெடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கிரைமியா பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் சர்வதேச அரசியல் நோக்கர்கள், நீண்ட தூரத்தில் இருக்கும் இலக்குகளை எளிதில் தாக்கும் தன்மை கொண்ட அமெரிக்க ஆயுதங்களின் வருகை மோதலை மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Tags :