Advertisement

பாக்முட் நகரில் இருந்து உக்ரைன் படைகள் வெளியேறலாம்

By: Nagaraj Thu, 02 Mar 2023 12:22:57 PM

பாக்முட் நகரில் இருந்து உக்ரைன் படைகள் வெளியேறலாம்

உக்ரைன்: உக்ரைன் ஆலோசகர் தகவல்... தேவைப்படும்போது பாக்முட் நகரிலிருந்து உக்ரைனிய படைகள் வெளியேறக்கூடுமென உக்ரைனின் ஜனாதிபதியின் ஆலோசகர் அலெக்சாண்டர் ரோட்னியன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கிழக்கு உக்ரைனில் உள்ள உப்பு மற்றும் ஜிப்சம் சுரங்கங்களின் நகரமான பாக்முட்டைக் கைப்பற்றுவதற்கு, ரஷ்யா பல மாதங்களாக முன்னெடுத்துவரும் உக்கிர தாக்குதல்களுக்கு இது ஆறுதல் அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.

உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கியின் பொருளாதார ஆலோசகரான அலெக்சாண்டர் ரோட்னியன்ஸ்கி இதுகுறித்து கூறுகையில், ‘பாக்முட் பகுதியில் ரஷ்யப் படையினர் தொடர்ந்து தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த நகரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் இராணுவம் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

adviser,alexander,rodnyansky,army,president of ukraine ,ஆலோசகர், அலெக்சாண்டர், ரோட்னியன்ஸ்கி, இராணுவம், உக்ரைனின் ஜனாதிபதி

இதுவரை பாக்முட் நகரம் உக்ரைன் படையினரின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. தேவைப்படும்போது அந்த நகரிலிருந்து இராணுவம் வெளியேறும். எந்தப் பலனும் இல்லாமல் எங்களது படையினர் அனைவரையும் இழக்க நாங்கள் தயாராக இல்லை’ என கூறினார்.

கடந்த இலையுதிர்காலத்தில் ரஷ்யா சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட நான்கு மாகாணங்களில் ஒன்றான டொனெட்ஸ்க் மாகாணத்தில் பக்முட் அமைந்துள்ளது. ரஷ்யா டொனெட்ஸ்க் மாகாணத்தின் பாதியைக் கட்டுப்படுத்துகிறது. அந்த மாகாணத்தின் மீதமுள்ள பாதியைக் கைப்பற்ற, ரஷ்யப் படைகள் பாக்முட் வழியாகச் செல்ல வேண்டும்.

Tags :
|