Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவுக்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட குரல் கொடுக்கும் ஐ.நா. தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு

கொரோனாவுக்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட குரல் கொடுக்கும் ஐ.நா. தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு

By: Karunakaran Sun, 13 Sept 2020 2:43:23 PM

கொரோனாவுக்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட குரல் கொடுக்கும் ஐ.நா.  தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு

சீனாவில் கடந்த டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகின் 200-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி 2.85 கோடி பேரை தாக்கியுள்ளது. இதில் 9.16 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர். மனித சமூகத்துக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்க்கு எதிராக அனைத்து உலக நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச்சபை விரும்புகிறது.

நேற்று முன்தினம் 193 உறுப்பினர்களை கொண்டுள்ள ஐ.நா. பொதுச்சபையில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு இந்தியா உள்ளிட்ட 169 நாடுகள் ஆதரவாக ஓட்டு போட்டன. இதுகுறித்து ஐ.நா.சபைக்கான இந்திய துணைத்தூதர் கே.நாகராஜ் நாயுடு தனது டுவிட்டரில், கொரோனாவுக்கு எதிராக உலகளவில் ஒன்றுபட்டு செயல்படவும், ஒற்றுமையை நிலை நிறுத்தவும், பல தரப்பு ஒத்துழைப்பு வழங்கவும் ஐ.நா. பொதுச்சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு ஆதரவாக இந்தியா வாக்கு அளித்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

un,corona virus,india,resolution ,ஐ.நா., கொரோனா வைரஸ், இந்தியா, தீர்மானம்

ஐ.நா. பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த தீர்மானம், அனைத்து மட்டங்களிலும் சர்வதேச ஒத்துழைப்பு, பன்முகத்தன்மை, ஒன்றுமை ஆகியவற்றுக்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. மேலும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் மற்றும் அதன் விளைவுகள் போன்ற உலகளாவிய நெருக்கடிகளுக்கு உலகம் திறம்பட பதில் அளிப்பது ஒன்றுதான் வழி. உலக சுகாதார நிறுவனத்தின் முக்கிய தலைமைத்துவ பங்களிப்பு ஒப்புக்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளது.

மேலும், இந்த தீர்மானம், உறுப்பு நாடுகளை, அனைத்து நாடுகளுக்கும் தரம் வாய்ந்த, பாதுகாப்பான, திறமையான, மலிவு கட்டணத்திலான பரிசோதனை, சிகிச்சை, மருந்து, தடுப்பூசி, கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான அத்தியாவசிய சுகாதார தொழில் நுட்பங்கள் ஆகியவற்றுக்கு சரியான நேரத்தில் அணுகலை ஏற்படுத்த வலியுறுத்துகிறது. இந்த தீர்மானத்துக்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும் வாக்கு அளித்தன. உக்ரைனும், ஹங்கேரியும் ஓட்டெடுப்பை புறக்கணித்து விட்டன.

Tags :
|
|