Advertisement

ஐ.நா. பெண்கள் நிலை ஆணைய உறுப்பினராக இந்தியா தேர்வு

By: Nagaraj Tue, 15 Sept 2020 09:05:11 AM

ஐ.நா. பெண்கள் நிலை ஆணைய உறுப்பினராக இந்தியா தேர்வு

இந்தியா தேர்வானது... ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய அங்கமான பெண்கள் நிலை ஆணையத்தின் (UNCSW) உறுப்பினராக இந்தியா தேர்வாகி உள்ளது.

இதனை ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி, தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார், அதில் அவர் கூறியிருப்பதாவது: ' பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் (ஈகோசாக்) அமைப்பான ஐக்கிய நாடுகளின் பெண்கள் நிலை ஆணையத்தின் (UNCSW) உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இது இந்தியா அனைத்து துறைகளிலும் பெண்கள் சமத்துவத்துத்தை உறுதிபடுத்தியதற்கு கிடைத்த வெகுமதி மற்றும் ஒப்புதல் ஆகும். தேர்வு செய்ததற்காக உறுப்பு நாடுகளுக்கும் நன்றி' இவ்வாறு தெரிவித்துள்ளார்.

india,un,election,4 years,won ,இந்தியா, ஐ.நா., தேர்வு, 4 ஆண்டுகள், வெற்றி பெற்றது

2021 முதல் 2025 வரை இந்தியா நான்கு ஆண்டுகள் UNCSW உறுப்பினராக இருக்கும். இந்தியா, சீனா மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இதற்கான தேர்தலில் போட்டியிட்டன. ஆனால் சீனாவால் பாதி ஓட்டுகளைக் கூட பெற முடியவில்லை. முன்னதாக, ஜூன் 18, 2020 அன்று, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு (யு.என்.எஸ்.சி) நிரந்தரமற்ற உறுப்பினர்களில் ஒருவராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதற்கு 128 ஓட்டுகள் தேவைப்பட்ட நிலையில் இந்தியா 192 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|