Advertisement

மக்கள் தொகை குறித்து ஐ.நா. வெளியிட்ட அறிக்கை

By: Nagaraj Mon, 14 Nov 2022 11:21:01 AM

மக்கள் தொகை குறித்து ஐ.நா. வெளியிட்ட அறிக்கை

நியூயார்க்: உலகின் மக்கள் தொகை இன்னும் சில நாட்களில் 800 கோடியாக அதிகரிக்க உள்ளதாம். இதை ஐநா.வின் அறிக்கை தெரிவித்துள்ளது.

நவம்பர் 15ம் தேதி உலக மக்கள் தொகை 8 பில்லியன் இலக்கை எட்டுகிறது. தற்போது சீனா முதலிடத்தில் இருந்தாலும், 2030ம் ஆண்டுக்குள் மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தில் இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

report,population,un,human life expectancy,projection ,அறிக்கை, மக்கள் தொகை, ஐ.நா., மனித ஆயுள்காலம், கணிப்பு

அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் நைஜீரியா நான்காம் இடத்திலும் பாகிஸ்தான் 5வது இடத்திலும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு காரணமாக உள்ள நாடுகளாகும். இதே போல் சராசரி மனித ஆயுள் காலமும் சில ஆண்டுகள் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


இந்த அறிக்கை மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. வெகு வேகமாக மக்கள் தொகை உயர்வடைந்து கொண்டே இருப்பதால் அதனால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து இப்போதே அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
|
|