Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஈரான் மீதான அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை நிராகரித்தது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்

ஈரான் மீதான அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை நிராகரித்தது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்

By: Nagaraj Sun, 16 Aug 2020 1:52:10 PM

ஈரான் மீதான அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை நிராகரித்தது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்

ஐ.நா. பாதுகாப்பு கவன்சில் நிராகரிப்பு... ராணுவ தளவாடங்களை ஈரான் ஏற்றுமதி - இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் நீடிக்க வேண்டும் அமெரிக்கா கொண்டு வந்த தீா்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்தது.

ராணுவ தளவாடங்களை ஈரான் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கும், பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்துள்ள தடை 13 ஆண்டுகளாக அமலில் உள்ளது. அந்தத் தடை, வரும் அக்டோபா் மாதம் 19-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், ஈரான் மீதான ஆயுத வா்த்தகத் தடையை மேலும் நீடிக்க வகை செய்யும் தீா்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா தாக்கல் செய்தது.

15 உறுப்பினா்களைக் கொண்ட அந்த கவுன்சிலில், அமெரிக்காவைத் தவிர டோமினிக் குடியரசு மட்டுமே அந்தத் தீா்மானத்துக்கு ஆதரவு அளித்தது. நிரந்தர உறுப்பு நாடுகளான ரஷியாவும், சீனாவும் தீா்மானத்தை எதிா்த்து வாக்களித்தன. பிரான்ஸ், ஜொ்மனி, பிரிட்டன் மற்றும் பிற எட்டு நாடுகளும் வாக்கெடுப்பை புறக்கணித்தன. இதையடுத்து, அமெரிக்கா கொண்டு வந்த அந்தத் தீா்மானம் தோல்வியடைந்தது. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

un,security,council,united states,rejected ,ஐ.நா., பாதுகாப்பு, கவுன்சில், அமெரிக்கா, நிராகரித்து விட்டது

இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் மைக்கேல் பாம்பேயோ கூறியதாவது:

ஈரான் மீது 13 ஆண்டுகளாக இருந்து வந்த ஆயுத வா்த்தகத் தடையை நீட்டிக்க மறுத்துள்ளதன் மூலம், உலக அமைதியை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் கடமையிலிருந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தவறிவிட்டது. இதன் மூலம், உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதில் முதன்மை வகிக்கும் ஈரான், தனக்குத் தேவையான எத்தகைய ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களையும் ஏற்றுமதி செய்யவோ, இறக்குமதி செய்யவோ வழி ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கவுன்சிலின் இந்த நடவடிக்கை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. ஈரான் மீதான ஆயுத வா்த்தகத் தடையை நீட்டிக்குமாறு வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பைச் சோ்ந்த 6 நாடுகளும் அமெரிக்காவை வலியுறுத்தின.

இஸ்ரேலும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளது. தடைக் காலம் முடிவடைந்த பிறகு, தற்போது உள்ளதைவிட அதிக அழிவை ஈரான் ஏற்படுத்தும் என்பது அந்த நாடுகளுக்கு நன்றாகவே தெரியும். எனினும், அவா்களது கோரிக்கையை ஐ.நா. நிராகரித்து விட்டது என்றாா் அவா்.

Tags :
|