Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆப்கானிஸ்தானில் 6500 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருப்பதாக ஐநா அறிக்கையில் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் 6500 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருப்பதாக ஐநா அறிக்கையில் அறிவிப்பு

By: Karunakaran Sun, 26 July 2020 8:31:22 PM

ஆப்கானிஸ்தானில் 6500 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருப்பதாக ஐநா அறிக்கையில் அறிவிப்பு

ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்-கொய்தா பயங்கரவாதிகள் மற்றும் நிறுவனங்கள் மீதான தடை குறித்த 26-வது அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளதில், பல்வேறு நாடுகளில் உள்ள பயங்கரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவல் விரிவாக வெளியிடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் 6000 முதல் 6500 வரையிலான பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த பயங்கரவாதிகளில் பெரும்பாலானோர் தெஹ்ரிக் தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்களால் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என இரண்டு நாடுகளுக்குமே அச்சுறுத்தல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


pakistan,terrorist,afghanistan,un report ,பாகிஸ்தான், பயங்கரவாதி, ஆப்கானிஸ்தான், ஐ.நா அறிக்கை

பெரிய பயங்கரவாதக் குழுவான டி.டி.பி, அமீர் நூர் வாலி மெஹ்சுத் தலைமையில் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் செயல்படுவதாகவும், அதன் துணைத் தலைவராக காரி அம்ஜாத்தும், செய்தித் தொடர்பாளராக முகமது கோரசானியும் செயல்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தனது மண்ணில் பயங்கரவாதிகளுக்கு தொடர்ந்து தங்குமிடம் மற்றும் ஆதரவவை பாகிஸ்தான் நாடு அளித்து வருகிறது எனவும், கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் குறிப்பிடத்தகுந்த அளவு எண்ணிக்கையில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருக்கிறது என ஐ.நா. தனது அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags :