Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இலங்கைக்கு 400 கோடி டாலர்கள் மதிப்பிலான உணவு, நிதி உதவிகளை இந்தியா வழங்கியதாக ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா தெரிவிப்பு

இலங்கைக்கு 400 கோடி டாலர்கள் மதிப்பிலான உணவு, நிதி உதவிகளை இந்தியா வழங்கியதாக ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா தெரிவிப்பு

By: vaithegi Mon, 05 Sept 2022 10:44:16 AM

இலங்கைக்கு 400 கோடி டாலர்கள் மதிப்பிலான உணவு, நிதி உதவிகளை இந்தியா வழங்கியதாக ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா தெரிவிப்பு

நியூயார்க்: இலங்கைக்கு 400 கோடி டாலர்கள் மதிப்பிலான நிதி உதவி வழங்கிஉள்ளது .. பொருளாதார நெருக்கடியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு கிட்டத்தட்ட 400 கோடி டாலர்கள் மதிப்பிலான உணவு, நிதி உதவிகளை இந்தியா வழங்கிஉள்ளதாக ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா தெரிவித்துள்ளது.

இதை அடுத்து ஐ.நா. பொதுச் சபையில், நேற்று நடந்த அமைதிஉருவாக்க ஆணையம் (பிபிசி) அறிக்கைகள் மற்றும் அமைதிஉருவாக்க நிதியத்தின் (பிபிஎப்) அறிக்கைகள் மீதான வருடாந்திர கூட்டு விவாதத்தில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா கம்போஜ் கூறுகையில் கடந்த சில மாதங்களில் கிட்டத்தட்ட 400 கோடி (4 பில்லியன்) டாலர் மதிப்பிலான உணவு, நிதி உதவிகளை இந்தியா வழங்கி கொண்டு வருகிறது.

financial assistance,india,sri lanka,un. general assembly ,இந்தியா ,இலங்கை,ஐ.நா. பொதுச் சபை

இலங்கைக்கு நாங்கள் தொடர்ந்து உதவுகிறோம். எனவே இதன் மூலம், உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவுகிறோம். 2017 இல் நிறுவப்பட்ட இந்தியா-ஐ.நா வளர்ச்சிக் கூட்டாண்மை நிதியம், ஐந்து ஆண்டு குறுகிய காலத்தில், இந்த நிதியம் 51 வளரும் நாடுகளுடன் இணைந்து 66 மேம்பாட்டுத் திட்டங்களுக்கான ஒரு துறையை உருவாக்கியுள்ளது. உக்ரைன் போரின் தொடக்கத்திலிருந்து, தேவைப்படும் நாடுகளுக்கு இந்தியாவும் நிதி மற்றும் உணவு உதவிகளை வழங்கி வருகிறது.உணவு மற்றும் பொருட்கள் விநியோகச் சங்கிலிகள் அழிவால் ஏற்படும் பாதகமான விளைவுகளைத் தணிப்பதற்காக இந்தியா உதவிகளை வழங்கி வருகிறது.

மேலும் கணிசமான மானியங்கள் மற்றும் கடன்களை வழங்குவதன் மூலம், தேவைப்படும் நாடுகளுக்கு நாங்கள் தொடர்ந்து உதவுகிறோம். மோதல்களுக்குப் பிந்தைய சூழ்நிலைகளில் இருதரப்பு மற்றும் பலதரப்பு மன்றங்கள் மூலம் நாங்கள் தொடர்ந்து உதவுகிறோம் என அவர் தெரிவித்தார். இலங்கைக்கு இந்தியா வழங்கி வரும் உதவி மற்றும் ஆதரவு வேறு எந்த நாட்டுக்கும் இதுவரைவரையிலும் வழங்கப்படவில்லை.

Tags :
|