Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புத்தர் பிரானின் போதனைகளை நினைவுபடுத்திய ஐ.நா.சபை பொதுச்செயலாளர்

புத்தர் பிரானின் போதனைகளை நினைவுபடுத்திய ஐ.நா.சபை பொதுச்செயலாளர்

By: Karunakaran Sat, 04 July 2020 3:37:09 PM

புத்தர் பிரானின் போதனைகளை நினைவுபடுத்திய ஐ.நா.சபை பொதுச்செயலாளர்

புத்தர்பிரான் பிறப்பையும், ஞானம் அடைந்ததையும் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் புத்த பூர்ணிமா மே மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக இந்த புத்த பூர்ணிமாவை தாமதமாக கொண்டாடியுள்ளது.

இந்நிலையில், ஐ.நா.சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் வெளியிட்டுள்ள செய்தியில்,கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் இந்த காலகட்டத்தில், புத்தர்பிரான் வலியுறுத்திய ஒற்றுமையும், பிறருக்கு சேவை செய்வதும் முன் எப்போதையும் விட இப்போது முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.

buddha pran,un secretary,antonio gutierrez,teachings ,புத்தர், ஐ.நா. செயலாளர், அன்டோனியோ குட்டரெஸ், போதனைகள்

மேலும் அவர், உலகளாவிய ஒத்துழைப்பின் மூலம் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று நோயின் சமூக, பொருளாதார விளைவுகளை நாடுகளால் சமாளிக்க முடியும். புத்தர்பிரானின் போதனைகள், கொரோனா வைரஸ் விடுக்கிற சவால்களை சந்திப்பதற்கு நாடுகளும், மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டியதை நினைவுபடுத்துகின்றன என்று நினைவு கூர்ந்துள்ளார்.

நாம் நமது ஆற்றல்களையும், நிபுணத்துவத்தையும் இணைப்பதின்மூலம் மட்டுமே இன்று நம் உலகில் உள்ள மிகப்பெரிய பலவீனங்களை சரி செய்ய முடியும் என்றும், சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் மட்டுமே பொருளாதார, சமூக பாதிப்புகளை எளிதாக்குவோம் என்றும் ஆண்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

Tags :