Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஈரான் மீது மீண்டும் ஐ.நா. பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் - அமெரிக்கா உறுதிபட அறிவிப்பு

ஈரான் மீது மீண்டும் ஐ.நா. பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் - அமெரிக்கா உறுதிபட அறிவிப்பு

By: Karunakaran Fri, 18 Sept 2020 1:15:24 PM

ஈரான் மீது மீண்டும் ஐ.நா. பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் - அமெரிக்கா உறுதிபட அறிவிப்பு

ஈரான் அதிக அளவு அணு ஆயுதங்களை பயன்படுத்தி உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்ததாய் முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகளை நீக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்த உறுப்பினர்களான அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளும் ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டது.

இந்நிலையில், அமெரிக்காவில் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தில் பல்வேறு குறைகள் இருப்பதாக கூறி வந்த டிரம்ப் கடந்த 2018-ம் ஆண்டு இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தார். பின்னர், ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தற்போது அதிகமாக உருவாகியுள்ளது.

un security council,iran,uranium enrichment sanctions,us ,ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், ஈரான், யுரேனியம் செறிவூட்டல் தடைகள், யு.எஸ்

அமெரிக்கா அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகிவிட்டதால், தற்போது அதில் இடம் பெற்றுள்ள மீள் தடை அம்சத்தைப் பயன்படுத்தி அமெரிக்காவால் ஈரான் மீது தடை விதிக்க முடியாது என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மற்ற நாடுகள் தெரிவிக்கின்றன. தற்போது, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. சபை பொது கூட்டத்தில் ஈரான் மீதான ஐ.நா. பொருளாதாரத் தடைகள் நாளை அறிவிக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அப்போது பேசிய அமெரிக்காவின் வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ, உலகின் மிகப்பெரிய பயங்கரவாத ஆதரவாளராக ஈரான் உள்ளது. எனவே அந்த நாடு போர் ஆயுதங்களை வர்த்தகம் செய்வது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று நாங்கள் நம்பவில்லை. எனவேதான் ஈரான் மீது ஐ.நா. பொருளாதாரத் தடைகள் மீண்டும் விதிக்கப்பட வேண்டும் என்கிறோம். அந்த தடைகள் அமல்படுத்துவதை உறுதி செய்ய நாங்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் நாங்கள் செய்வோம். மத்திய கிழக்குப் பகுதியில் அமைதியை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் அமெரிக்கா செய்யும் என்று தெரிவித்துள்ளார்.


Tags :
|