Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஈரானுக்கு எதிரான ஐ.நா. பொருளாதார தடைகளை மீண்டும் அமல்படுத்த அமெரிக்கா கோரிக்கை

ஈரானுக்கு எதிரான ஐ.நா. பொருளாதார தடைகளை மீண்டும் அமல்படுத்த அமெரிக்கா கோரிக்கை

By: Karunakaran Fri, 21 Aug 2020 5:57:32 PM

ஈரானுக்கு எதிரான ஐ.நா. பொருளாதார தடைகளை மீண்டும் அமல்படுத்த அமெரிக்கா கோரிக்கை

மேற்கு ஆசிய நாடான ஈரான் அதிக அளவு அணு ஆயுதங்களை பயன்படுத்தி உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்ததால், கடந்த 2010ம் ஆண்டு ஈரான் மீது ஐ.நா. ஆயுத தடையை விதித்தது. இதனால் ஈரான் வெளிநாடுகளில் இருந்து போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் போன்ற ஆயுதங்களை வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டது.

இருப்பினும் அணு ஆயுதங்கள் தொடர்பாக அமெரிக்கா உள்பட 6 வல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே கடந்த 2015ம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஈரான் அந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள நிபந்தனைகளை மீறினால், அந்த நாட்டின் மீது ஐ.நா. தடையை மீண்டும் அமல்படுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மற்ற எந்த நாட்டுக்கும் உரிமை உண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது.

un security council,iran,uranium enrichment,us ,ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், ஈரான், யுரேனியம் செறிவூட்டல், யு.எஸ்

இந்நிலையில் அக்டோபர் மாதம் காலாவதியாகும் ஈரான் மீதான ஐ.நா. ஆயுத தடையை காலவரையின்றி நீட்டிக்கக் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. இதனால் ஈரான் விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா மிகவும் மோசமான முறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த அமெரிக்கா, ஈரான் மீதான அனைத்து ஐ.நா. பொருளாதாரத் தடைகளையும் மீண்டும் அமல்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இருப்பினும், அமெரிக்கா அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகிவிட்டதால், தற்போது அதில் இடம் பெற்றுள்ள மீள் தடை அம்சத்தை பயன்படுத்தி அமெரிக்காவால் ஈரான் மீது தடை விதிக்க முடியாது என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மற்ற நாடுகள் தெரிவிக்கின்றன. ஒப்பந்தத்திலிருந்து விலகினாலும் மீள் தடை அம்சத்தை பயன்படுத்துவதிலிருந்து அமெரிக்காவைத் தடுக்க முடியாது என டிரம்ப் நிர்வாகம் தெரிவிக்கிறது.

Tags :
|