Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஐ.நா. பொதுச்சபை கூட்டத் தொடர் துணைத் தலைவராக இலங்கை தேர்வு

ஐ.நா. பொதுச்சபை கூட்டத் தொடர் துணைத் தலைவராக இலங்கை தேர்வு

By: Nagaraj Sat, 03 June 2023 7:52:55 PM

ஐ.நா. பொதுச்சபை கூட்டத் தொடர் துணைத் தலைவராக இலங்கை தேர்வு

கொழும்பு: இலங்கை துணைத்தலைவர் ஆனது... ஐ.நா பொதுச் சபையின் 78வது கூட்டத் தொடரின் துணைத் தலைவர்களாக ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த ஈரான், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன.

அதன்படி 2023 செப்டெம்பர் முதல் 2024 செப்டெம்பர் வரை ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் சார்பாக இலங்கை இந்த முக்கியமான பதவியை ஏற்றுக்கொள்கின்றது.

ஆப்பிரிக்கா சார்பாக காங்கோ, காம்பியா, மொராக்கோ, செனகல், உகாண்டா, சாம்பியாவும் ஆசியா பசிபிக் நாடுகளுக்கு ஈரான், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, உஸ்பெகிஸ்தானும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

un general assembly,vice presidents,other states,united states ,ஐ.நா. பொதுச்சபை, துணைத்தலைவர்கள், பிற மாநிலங்கள், அமெரிக்கா

கிழக்கு ஐரோப்பியாவிற்கு எஸ்டோனியாவும், லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் தீவுகளுக்கு பொலிவியாவின் ப்ளூரினேஷனல் ஸ்டேட், சுரினாம் போன்ற நாடுகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் ஐ.நா. பொதுச் சபையின் 78வது அமர்விற்கு துணைத் தலைவர்களாக மேற்கு ஐரோப்பிய மற்றும் பிற மாநிலங்களுக்கு ஐஸ்லாந்து, நெதர்லாந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட துணைத் தலைமை நாடுகள், ஐ.நா.பாதுகாப்பு சபையின் வீட்டோ அதிகாரம் கொண்ட ஐந்து நிரந்தர உறுப்பு சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரித்தானியா மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து செயற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :