Advertisement

ரஷ்யாவுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கண்டனம்

By: Nagaraj Wed, 13 Sept 2023 07:03:16 AM

ரஷ்யாவுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கண்டனம்

நியூயார்க்: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கண்டனம்... கருங்கடல் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய ரஷ்யாவுக்கு ஐநா.மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் போரில் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார ஏற்றுமதித் தடைகளைஅறிவித்தன.

geneva,un human rights council,condemnation,russia ,ஜெனிவா, ஐநா மனித உரிமை, கவுன்சில், கண்டனம், ரஷ்யா

இதையடுத்து கடந்த ஜூலை மாதத்தில் ஐநா.வால் முன்னெடுக்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்தது ரஷ்யா. கருங்கடல் வழியாக கோதுமை உள்ளிட்ட தானியங்கள் ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ரஷ்யா அறிவித்தது.

இதனால் பல நாடுகளில் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உணவுப்பொருள் விலை உயர்ந்ததற்கு ரஷ்யாவின் இந்த முடிவுதான் காரணம் என்று ஜெனிவாவில் நடைபெற்ற ஐநா.மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் அதன் தலைவர் வோல்கர் டர்க் குற்றம் சாட்டினார்.

Tags :
|