Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முடியலை... வளர்ப்பு யானைகளை பராமரிக்க முடியாமல் திணறும் உரிமையாளர்கள்!!!

முடியலை... வளர்ப்பு யானைகளை பராமரிக்க முடியாமல் திணறும் உரிமையாளர்கள்!!!

By: Nagaraj Wed, 13 May 2020 11:21:27 PM

முடியலை... வளர்ப்பு யானைகளை பராமரிக்க முடியாமல் திணறும் உரிமையாளர்கள்!!!

கொரோனா மனிதர்களை மட்டுமின்றி அனைத்து உயிரினத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்படி தெரியுங்களா?

மனிதர்களுக்கு வருமானம் இழப்பு ஒரு பக்கம் என்றால் அவர்களின் வளர்ப்பு பிராணிகளை பராமரிக்க முடியாத நிலைக்கும் வந்துள்ளனர். அந்த வகையில் கேரளாவில் யானைகளை வளர்ப்பவர்கள்
கொரோனா ஊரடங்கு காரணமாக, அதனை பராமரிப்பதற்கு
வருமானம் இல்லாமல் கையை பிசைந்து வருகின்றனர்.

breeding elephant,caregiver,kerala,owners ,வளர்ப்பு யானை, பராமரிப்பு, கேரளா, உரிமையாளர்கள்

நாய், பூனையை வளர்த்தாலே செலவு எக்கச்சக்கம் ஆகும். சிலர் ஆசைக்காக குதிரையை வளர்ப்பார்கள். கேரளாவில் யானையை வளர்ப்பது "பேஷன்". அங்கு அதிகம் பேர் வளர்ப்பு பிராணியாக யானையை வளர்க்கின்றனர். பலர் திருவிழா, கல்யாணம் போன்றவற்றுக்கு யானையை வாடகைக்கு அனுப்பி சம்பாத்தியமும் நடத்தி வருகின்றனர்.

ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கால் வருமானம் இழந்துள்ளதால் யானைகளை பராமரிக்க முடியாமல் பலரும் திணறி வருகின்றனர்.

Tags :
|